குழந்தைகளில் மெட்டாபோலிசத்தை அதிகரிக்கும் தாய்ப்பால்: ஆய்வில் கண்டுபிடிப்பு

Report Print Givitharan Givitharan in குழந்தைகள்

தாய்ப்பால் ஆனது குழந்தைப் பருவ வாழ்க்கையில் முக்கிய இடத்தினைப் பெறுகின்றது.

இது பசியைப் போக்கும் உணவாக காணப்படுவது மட்டுமன்றி உடல் ஆரோக்கியத்தையும் பேணவும் உதவுகின்றது.

இவ்வாறான முக்கியத்துவங்களைக் கொண்ட தாய்ப்பாலின் மற்றுமொரு மகத்துவம் கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது குழந்தைகளில் மெட்டாபோலிசத்தினை அதிகரிக்கச் செய்கின்றமை புதிய ஆய்வு ஒன்றின் ஊடாக வெளிவந்துள்ளது.

மெட்டாபோலிசம் என்பது உடலில் இடம்பெறும் ஒரு இரசாயன தாக்கம் ஆகும்.

இதன் ஊடாக உணவுச் சமிபாடு இலகுபடுத்தப்படுவதுடன் கலங்களுக்கிடையில் துணிக்கைகளை கொண்டு செல்கின்றமையையும் எளிமைப்படுத்துகின்றது.

இந்த ஆராய்ச்சியானது அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது கருத்தரித்து 38 வாரங்களுக்கு முன்னர் பிறந்த குழந்தைகளையும், 38 வாரங்களுக்கு பின்னர் பிறந்தை குழந்தைகளையும் ஒப்பிட்டு ஆய்வு செய்துள்ளனர்.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்