பிறந்த 6 மாத குழந்தைக்கு என்ன கொடுக்கலாம்?

Report Print Printha in குழந்தைகள்

குழந்தை பிறந்து ஆறு மாதத்திற்குப் பின் தாய்ப்பால் மட்டுமே கொடுப்பது குழந்தையின் வளர்ச்சிக்குப் போதாது.

அதனால் குழந்தை பிறந்து ஆறு மாதத்திற்குப் பின் குழந்தைக்கு தாய்பாலுடன் ஒருசில இணை உணவுகளை வீட்டிலே தயார் செய்து கொடுக்க வேண்டும்.

குழந்தைக்கு கொடுக்கும் உணவு முறைகள்?

குழந்தை பிறந்து முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டும் கொடுக்க வேண்டும். அதற்கு பின் அரிசிக்கஞ்சி, பருப்புக்கஞ்சி, வேகவைத்த காய்கறிகள், கீரைகள், மசித்த வாழைப்பழம் ஆகிய உணவுகளை கொடுக்கலாம்.

இத்தகைய உணவுகளை தயாரிக்கும் போது, காரம் சேர்க்கக் கூடாது.

6-9 மாதங்களில் என்ன கொடுக்கலாம்?

பிறந்த குழந்தை 6 மாதங்களுக்கு மேல் ஆனால், இட்லி , தோசை கொடுப்பதுடன், அது தொட்டுக் கொள்ள காரம் போடாத சாம்பார், சட்னியை கொடுக்கலாம்.

அரிசி உணவுடன் 1 ஸ்பூன் பருப்பு, காய்கீரை, தானிய வகைகள் மற்றும் 1 சப்பாத்தி, ராகிக்களி, மசித்த வாழைப்பழம், உப்புமா, பொங்கல் ஆகிய உணவுகளையும் கொடுக்கலாம்.

குழந்தைக்கு கொடுக்கும் எந்த உணவாக இருந்தாலும் குழந்தையின் பல் முளைக்கும் வரை மசித்து அல்லது நன்கு அரைத்து கொடுக்க வேண்டும்.

9-12 மாதங்களில் என்ன கொடுக்கலாம்?

குழந்தை பிறந்து 9 மாதங்களுக்கு மேல் ஆன பின் தாய்ப்பால் கொடுப்பதுடன், ஒரு இட்லி, தோசையுடன், வீட்டில் செய்த காரம் இல்லாத கீரைப்பருப்பு, சட்னி மற்றும் சாம்பாரை சேர்த்துக் கொடுக்கும் போது, அதனுடன் 1 ஸ்பூன் எண்ணெய் அல்லது நெய் சேர்த்துக் கொள்ளலாம்.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்