இரவு சாப்பிடும் போது குழந்தைகளிடம் இதை கேளுங்கள்

Report Print Printha in குழந்தைகள்

இரவு வேளையில் உணவு சாப்பிடும் நேரமானது, பெற்றோர்களுடன் குழந்தைகள் செலவழிக்க மிகச் சிறந்த நேரமாகும்.

அந்த நேரத்தில், குழந்தைகளுடன் ஒன்றாக அமர்ந்து கொண்டு நீங்கள் கேட்கும் சில கேள்விகள், குழந்தைகளின் வளர்ச்சி நிலையை ஊக்குவிப்பதாகவும், அவர்களை பற்றி முழுமையாக தெரிந்துக் கொள்ள உதவும் வகையிலும் இருக்க வேண்டும்.

பெற்றோர்கள் குழந்தைகளிடம் கேட்க வேண்டிய கேள்விகள்?
  • குழந்தைகள் இரவு உணவு சாப்பிடும் நேரத்தில், இன்றைக்கு மிகவும் மகிழ்ச்சியாக அல்லது கடினமாக இருந்தது என்ன? என்று கேட்க வேண்டும். இதனால் அவர்களை மகிழ்ச்சியாக அல்லது கடினமாக நினைக்கும் விடயங்களை நம்மால் புரிந்துக் கொள்ள உதவும்.
  • மதிய உணவு இன்று யாருடன் அமர்ந்து சாப்பிட்டாய்? என்று குழந்தைகளிடன் கேட்க வேண்டும். இதனால் குழந்தைகள் எப்போதும் யாருடன் அதிகமாக பழகுகிறார்கள் என்பதை தெரிந்துக் கொள்ள முடியும்.
  • நீ இன்று செய்த மிகச்சிறந்த விடயம் என்ன? என்று குழந்தைகளிடன் கேட்க வேண்டும். இதனால் குழந்தைகளின் திறமைகளை எளிதில் தெரிந்துக் கொள்ள முடியும்.
  • நீ மனநிறைவாக உணர்கிறாயா? என்று குழந்தைகளிடம் கேட்டால், அவர்கள் கூறும் பதிலை வைத்து, அவர்களின் மனநிறைவற்ற விடயத்தை பூர்த்தி செய்து, அவர்களை மகிழ்விக்க முடியும்.
  • உன்னை மிக அதிகமாக சிரிக்க வைத்த விடயம் எது? என்று குழந்தைகளிடம் கேட்க வேண்டும். இதனால் குழந்தைகள் எந்த விடயத்தில் அதிக ஆர்வம் செலுத்தினார்கள் என்பதை உணர முடியும்.
  • டி.வியில் ஒளிபரப்பாகும் செய்திகள் தொடர்பாக உனக்கு ஏதேனும் சந்தேகம் உள்ளதா? என்று கேட்டு தெரிந்துக் கொண்டால், அவர்களின் மனதில் தேடும் பதிகளுக்கு நீங்களே விளக்கத்தை அளிக்கலாம்.
  • நாளை நீ என்ன செய்ய விரும்புகிறாய்? என்ற கேள்வியை குழந்தைகளிடன் கேட்டால், அவர்கள் கூறும் பதிலை வைத்து, அவர்களின் குறிக்கோள்கள் எவ்வளவு ஆழமானது என்பதை தெரிந்து, அவர்களுக்கு உதவலாம்.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments