குழந்தைகளுக்கு கட்டாயம் சொல்லி கொடுக்க வேண்டிய 5 விடயங்கள்

Report Print Printha in குழந்தைகள்

நமது அனுபவங்களை நம்முடைய குழந்தைக்கும் சொல்லிக் கொடுத்து அவர்களை நல்வழியில் வழி நடத்தி செல்வது பெற்றோர்களின் முக்கிய கடமையாகும்.

எனவே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கட்டாயமாக சொல்லிக் கொடுக்க வேண்டிய சில முக்கியமான விடயங்கள் என்னவென்று பார்ப்போம்.

குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டியவை?
  • நம்மிடம் உள்ள தோற்றம், நிறம், அழகு, செயல், அறிவு, குடும்பம், வாழ்க்கை என்று இவை அனைத்தையும் நாம் நேசிக்க வேண்டும். தன்னைப் பற்றி நாமே இழிவாக கருதக் கூடாது. என்பதை குழந்தைகளிடம் கூற வேண்டும்.
  • குழந்தைகளுக்கு இந்த உலகின் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று உலகத்தை சுற்றிப் பார்க்கும் வாய்ப்பை கொடுக்க வேண்டும். இதனால் பயணங்களின் போது, குழந்தைகளின் அறிவுத்திறன் அதிகரிக்கும்.
  • நல்ல நண்பர்களை நம் வாழ்க்கையில் இருக்க வேண்டும். நல்ல நண்பர்கள் இருந்தால் தான் நாமும் நன்றாக இருக்க முடியும் என்பதை குழந்தைக்கு நன்கு புரிய வைக்க வேண்டும்.
  • ஒருவரின் வாழ்க்கையில் குறிக்கோள் என்பது மிகவும் அவசியம். அந்த குறிக்கோளை நோக்கி நாம் பயணிக்கும் போது, நம்முடைய வாழ்வில் எளிதில் வெற்றி பெற முடியும் என்பதை குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும்.
  • குழந்தைகளின் வயதுக் கோளாறுகளில் காதல் ஏற்படுவது இயல்பு. அவர்களுக்கு உண்மையான காதல் உன்னை தேடி வரும் வரை காத்திரு அவசரமாக ஏதேனும் ஒரு காதலில் இணைந்து விடாதே என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments