குழந்தை வளர்ப்பு: செல்லம், கண்டிப்பு எது சரியானது?

Report Print Printha in குழந்தைகள்

குழந்தைகளை செல்லம் கொடுத்து வளர்ப்பதா? அல்லது கண்டித்து வளர்ப்பதா? இது போன்ற இருவேறு கருத்துக்கள் அனைத்து பெற்றோர்களிடமும் உள்ளது.

ஆனால் உண்மையில், குழந்தைகளை வளர்ப்பது என்பது அவர்களின் மனநிலையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றது போல செல்லம் மற்றும் கண்டிப்பு இரண்டுமே கலந்து வளர்ப்பு முறை தான் சிறந்தது.

குழந்தைகளை எவ்வாறு வளர்ப்பது சிறந்தது?

தவறு செய்யும் குழந்தைகளை கடுமையான முறையில் கண்டிக்க வேண்டும் என்பது தவறான வழிமுறை.

குழந்தைகளின் மனநிலையைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ற முறையில், அவர்களது தவறுகளைச் சுட்டிக்காட்டி அன்பாக புரிய வைப்பதே சிறந்த வளர்ப்பு முறையாகும்.

குழந்தைகளின் குறைகளைச் சுட்டிக் காட்டும் முன், அவர்கள் செய்யும் நல்ல விடயங்களை முதலில் பாராட்டும் பழக்கத்தை பெறோர்கள் பின்பற்ற வேண்டும்.

இதனால் குழந்தைகளின் மனதில் தன்னம்பிக்கை அதிகமாகுவதுடன், குழந்தைகளுடைய மனநிலை எப்போதும் மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் இருக்கும்.

பெற்றோர்கள் எப்போதும் உண்மையான, யதார்த்தமான விடயங்களை அவர்களுக்குப் புரியும்படி பக்குவமாக,பொறுமையாகச் சொல்ல வேண்டும்.

ஏனெனில் அப்படி இருந்தால் தான் பெற்றோர் சொல்வதை காது கொடுத்து கேட்பதுடன், அதை மனதில் உள்வாங்கிக் கொள்ளும் பக்குவத்தை குழந்தைகள் ஏற்றுக் கொள்வார்கள்.

குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப, அவர்களுடைய பிரச்னைகளை புரிந்து கொள்ளும் படி, விளக்கிச் சொல்ல வேண்டும். இதுதான் பெற்றோர்களின் சரியான அணுகுமுறை.

குழந்தைகளின் தேவைகள் நியாயமானது அல்ல என்று தெரிந்தால், அதை அவர்களிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

குழந்தைகளின் எதிர்காலத்துக்குத் தேவையான கல்வி, விளையாட்டு போன்ற அனைத்தையும் உருவாக்கிக் கொடுப்பதோடு, நற்பண்புகள் நிறைந்த நல்ல மனிதனாக வளர்க்க வேண்டியது பெற்றோர்களின் முக்கிய கடமையாகும்.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments