குட்டி பிரபஞ்ச அழகி இவர்தான்

Report Print Printha in குழந்தைகள்

ஜார்ஜியா நாட்டின் பதுமி நகரில் நடைபெற்ற குட்டி பிரபஞ்ச அழகி போட்டியில், 12 வயது சிறுமி குட்டி பிரபஞ்ச அழகியாக தேர்வாகி சாதனை படைத்துள்ளார்.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பத்மாலயா நந்தா எனும் 12 வயது சிறுமி கட்டாக் நகரில் ஒரு பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் ஜார்ஜியா நாட்டின் பதுமி நகரில் நடைபெற்ற போட்டியில், குட்டி பிரபஞ்ச அழகியாக (Little Miss Universe ) தேர்வாகி, சாதனை படைத்துள்ளார்.

உலகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் இந்த போட்டிக்கு விண்ணப்பித்ததில், 75 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களில் 10 பேர்கள் மட்டுமே இறுதி போட்டிக்கு அழைக்கப்பட்டனர்.

நடுவர்கள் இல்லாத இப்போட்டியில், ஒவ்வொருவரும் பல சுற்று போட்டிகளுக்கு உட்படுத்தப்பட்டு, ஆன்லைன் மூலம் பார்வையாளர்களின் ஓட்டு எண்ணிக்கையின் படி, வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்தனர்.

அதன் அடிப்படையில், பத்மாலயா நந்தா எனும் சிறுமி இந்தியாவில் முதல் முறையாக குட்டி பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டு, தங்கக் கிரீடம் சூட்டப்பட்டது.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments