எனது பெற்றோரால் நான் அனுபவித்த கொடுமைகள்: 19 வயது பெண்ணின் நெகிழ்ச்சி கதை

Report Print Deepthi Deepthi in குழந்தைகள்

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஒழுக்கமாக வளர்க்க வேண்டும் என்ற அதிக ஆர்வத்தில் சில மோசமான கட்டுப்பாடுகளை விதிப்பதன் காரணமாக சில குழந்தைகள் வழி மாறி தவறான பாதைகளிலும், பல குழந்தைகள் மோசமான நினைவுகளையும் உள்ளடக்கிய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

தங்களால் சாதிக்க முடியாத ஒன்றை, தங்கள் குழந்தைகள் சாதிக்க வேண்டும் என அவர்கள் மீது பாரத்தை சுமத்துவது, தாங்கள் எந்த வாழ்க்கை சூழ்நிலையில் வளர்ந்தோமோ அதே கண்ணோட்டத்தோடு தங்கள் குழந்தைகளையும் பார்ப்பது, வளர்ப்பது போன்ற தவறுகளால் சில குழந்தைகளின் எதிர்காலம் தடம்மாறி போகிறது.

அப்படி தனது வாழ்வில் தனது பெற்றோர்களால் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெண் ஒருவர் பகிர்ந்துகொண்டதாவது, எனக்கு 5 வயது இருக்கும்போது, நான் வலது கையில் எழுதிக்கொண்டிருந்தேன், அப்போது எனது அம்மா மரக்கட்டையால் செய்யப்பட்ட பிரம்பினை எடுத்துக்கொண்டு வந்து எனது வலது கையில் மோசமாக தாக்கினார்.

நான் வலது கை பழக்கம் கொண்டவள், அதுதான் எனக்கு இயல்பாக இருந்தது, ஆனால் எனது தாய் நீ வலது கை பயன்படுத்தக்கூடாது, இடது கைதான் பயன்படுத்த வேண்டும் என கூறி, என்னை எனது இயல்பான நிலையில் இருந்து மாற்றினார்.

எனக்கு 10 வயது இருக்கும்போது எனது தந்தை அவர் அணியும் பெல்ட்டால் என்னை அடித்து உதைத்தார், இதனால் எனது தோல்கள் தடித்தும், சிவந்தும் போயின. காரணம் நான் நல்ல மதிப்பெண் பெறவில்லை என்று.

எனக்கு 12 வயது இருக்கையில் நான் பள்ளி முடிந்து வீடு திரும்பிய பின்னர் டியூசன் செல்வேன், அதன் பின்னர் என்னை ஒரு அறைக்குள் வைத்து என்னை பூட்டி வைத்து விடுவார்கள், உணவு கொடுப்பதற்கு மட்டுமே கதவினை திறந்துவிடுவார்கள்.

எனக்கு 15 வயது இருக்கையில் நான் எனது பள்ளித்தோழனோடு பேசிக்கொண்டிருப்பதை எனது பெற்றோர் பார்த்துவிட்டனர், அன்றைய இரவு எனது வாழ்நாளில் மறக்கமுடியாத இரவாகிவிட்டது.

வீட்டில் பயன்படுத்தும் பாத்திரங்கள் மற்றும மூங்கில் கம்பு கொண்டு என்னை கொடுமையாக அடித்தார்கள், இனிமேல் இவ்வாறு செய்தால் உனது படிப்பை நிறுத்திவிட்டு உனக்கு திருமணம் செய்துவைத்துவிடுவோம் என எச்சரித்தனர்.

மேலும் எனக்கு பிடித்தமான கணக்கு புத்தகத்தை எரித்தார்கள், அது எனக்கு பிடித்தமான பாடம் ஆகும்.

எனக்கு 17 வயது இருக்கையில் தூய்மையற்றவள் என்ற பெயரில் என்னை பெற்றெடுத்த தாயாள் அழைக்கப்பட்டேன்,

தற்போது எனக்கு 19 வயதாகிவிட்டது, எனது வாழ்வில் முந்தைய பருவத்தில் நடந்தவற்றையெல்லாம் நினைக்கும் போது எனக்கு கோபம் வருகிறது, அதே சமயத்தில் அழுகையும் வருகிறது.

ஆனால், எனக்கு பெற்றோர் என்றால் மிகவும் பிடிக்கும், அவர்களிடம் இருந்து எதிர்பார்ப்பது அன்பு மட்டும்தான், எல்லா பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு நல்லதொரு நினைவுகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்பதே எனது ஆசை என கூறியுள்ளார்.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments