குழந்தைகளுக்கு டீ, காபி கொடுப்பது நல்லதா?

Report Print Printha in குழந்தைகள்

பொதுவாகவே குழந்தைகளுக்கு டீ, காபி பருக கொடுக்கலாமா என்ற சந்தேகம் தாய்மார்களுக்கு இருக்கும்.

குழந்தைகளுக்கு டீ, காபி கொடுப்பதால், அது அதிகமான அளவில் சிறுநீரை வெளியேற்றி, உடலில் உள்ள நீரின் அளவை குறைத்து, நீர் இழப்பு பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

டீயில் உள்ள alkaloid எனும் பொருள் நாம் உண்ணும் உணவில் உள்ள இரும்பு சத்துக்களை குடலால் உறிஞ்சவிடாமல் தடுத்து, iron deficiency என்ற ரத்த சோகை மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

டீயில் உள்ள டென்னின் மற்றும் டேனிக் அமிலம் இரைப்பையில் அல்சரை ஏற்படுத்தி, பசியை குறைத்து விடுகிறது.

டீயில் 2% கேபின் எனும் அடிமைப்படுத்தும் பொருள் உள்ளது. இது குழந்தையின் நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தி, தலைவலி, சோர்வு, நடுக்கம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

குறிப்பு

குழந்தைகளுக்கு டீ, காபி போன்ற பானங்களை 4 வயது வரை தவிர்ப்பது நல்லது. 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒருமுறை மட்டும் குறைவான அளவில் டீ அல்லது காபியை கொடுக்கலாம்.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments