தந்தையின் விட்டமின் D குறைபாடு: குழந்தையை பாதிக்குமா?

Report Print Printha in குழந்தைகள்

தந்தைக்கு விட்டமின் D அளவு குறைவாக இருந்தால், அது குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

கர்ப்பக் காலத்தில் தாயின் உணவுபழக்க முறைகள் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியை தீர்மானிக்கும் என்பது நமக்கு தெரியும். ஆனால் அதில் தந்தையின் ஆரோக்கியம் கூட மிகவும் அவசியம்.

ஆய்வு

சமீபத்திய ஆய்வின் படி, பெண்களின் ஆரோக்கியம் மட்டும் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் வளர்ச்சியையும் தீர்மானிப்பது இல்லை. தந்தையின் விட்டமின் D உட்கொள்ளும் அளவிற்கும் குழந்தையின் வளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்று ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது.

விட்டமின் D எதிலிருந்து கிடைக்கிறது?

விட்டமின் D என்பது உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்து, இது சன்ஷைன் விட்டமின் எனவும் அழைக்கப்படுகிறது. சூரியனின் அல்ட்ரா வயலட் கதிரானது நமது தோலுடன் தொடர்பு கொண்டு விட்டமின் D நமது உடலில் உருவாகிறது.

விட்டமின் D, நமது உடலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அளவுகளை ஒழுங்குபடுத்தி, வலுவான எலும்புகள், பற்கள் மற்றும் தசைகள் ஆகியவற்றின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கிய பங்கினை வகிக்கிறது.

குறிப்பு

விட்டமின் D உங்களுக்கு கிடைக்க வாரத்தில் மூன்று முறையாவது காலை 11 மணியிலிருந்து மாலை 3 மணிக்குள் அடிக்கும் வெயிலில் குறைந்தது 15 நிமிடமாவது இருக்க வேண்டும்.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments