15 நிமிடம் குழந்தைகள் தொலைக்காட்சி பார்த்தால் என்ன ஆகும் தெரியுமா?

Report Print Meenakshi in குழந்தைகள்

நகரத்தில் வாழும் குழந்தைகளுக்கு ஓடி விளையாடுவதற்கு இடம் கிடைப்பது இல்லை. ஒன்றரை வயது முதலே அவர்களின் பொழுதுபோக்காக தொலைக்காட்சியும், மொபைலும் மாறிவிடுகிறது.

குழந்தைகள் மொபைல் போனை பயன்படுத்துவதை பெருமையாக கருதும் பெற்றோர்கள் பலருக்கும் அதன் பிண்னணியில் இருக்கும் விளைவுகள் புரிவதில்லை.

அதிக நேரம் டிவியிலும் தொலைக்காட்சியிலும் மூழ்கும் குழந்தைகள் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இங்கிலாந்து பல்கலைக்கழகம் 3 வயதிற்கு மேல் உள்ள 60 குழந்தைகளிடம் நடத்திய ஆய்வில் 15 நிமிடங்களுக்கு மேல் தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளின் படைப்பாற்றல் திறனானது குறைவது கண்டறியப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி பார்ப்பதை குறைத்து புத்தகங்களை படிப்பதிலும் புதிர் விளையாட்டுகளிலும் ஆர்வம் காட்டும் குழந்தைகளின் படைப்பாற்றல் அதிகமாக இருக்கும்.

மேலும் அவர்களின் கருத்துக்கள் துல்லியமாகவும் தெளிவாகவும் இருக்கும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அதிகளவு தொலைக்காட்சியினை பார்க்கும் குழந்தைகளின் படைப்பாற்றல் குறைவதால் அவர்களின் அறிவு சார்ந்த வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments