குழந்தைகளுக்கு பாட்டிலில் பால் கொடுப்பதற்கு முன் இதை கொஞ்சம் படிங்க!

Report Print Meenakshi in குழந்தைகள்

பிறந்த குழந்தைகளுக்கு முதலில் தாய்பாலே உணவாக தரப்பட்டது. பின் குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்த பின்னர் சங்கின் மூலம் அவர்களுக்கு பால் புகட்டப்பட்டது.

தற்போது அவை அனைத்தும் மறைந்து பெரும்பாலான குழந்தைகளுக்கு பால்பாட்டிலின் மூலமே பால் புகட்டப்படுகிறது.

வெளியிடங்களுக்கு செல்லும் போது குழந்தைகளுக்கு பால் தருவதில் ஏற்படும் அசவுகரியங்களை தவிர்ப்பதற்காகவே புட்டிபால் தருவதாக தாய்மார்கள் கூறுகின்றனர்.

ஆனால் இதனால் ஏற்படும் விளைவுகளை பெரும்பாலான தாய்மார்கள் அறிந்திருப்பதில்லை. பால் பாட்டில்களில் நாம் உபயோகிக்கும் ரப்பரில் அதிகளவில் கிருமிகள் பரவி குழந்தைகளுக்கு நோய்தொற்றினை உண்டாக்குகிறது.

பால் பாட்டில் குடித்து பழகும் குழந்தைகள் கப்பில் குடிக்க பழகுவது மிக கடினம். பாட்டிலில் குடிக்கும் போது நாக்கினை மடக்கி குடிப்பதால் பேசும் போது உச்சரிப்பு சரியாக இருப்பது இல்லை.

மேலும், உதடு, பல் மற்றும் வாய் அமைப்பில் மாற்றங்கள் ஏற்படுகிறது. பல் வரிசையானது சீராக இல்லாமல் மாறுகிறது.

குழந்தைகள் பாட்டிலில் பால் குடிக்கும் போது மூச்சு விடாமல் குடித்து முடிகின்றனர். அப்போது பாட்டிலில் உள்ள காற்றும் வயிற்றுக்குள் சென்று குழந்தைகளுக்கு வயிறு உப்புசம் மற்றும் வாயு பிரச்சனைகள் ஏற்படுகிறது.

இது மட்டுமல்லாமல் பாட்டிலில் பால் அருந்தும் குழந்தைகளுக்கு தாயின் அரவணைப்பு சரியாக கிடைப்பது இல்லை.

எனவே, குழந்தைகளுக்கு பாட்டிலில் புகட்டுவதை தவிர்த்து கப் அல்லது சங்கில் கொடுத்து பழக்கலாம். இதன் மூலம் நோய் தொற்றுகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கலாம்.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments