குறைப்பிரசவமா? அதிபுத்திசாலி நீங்க தான்

Report Print Meenakshi in குழந்தைகள்

குறைப்பிரசவத்தில் பிறந்தவர்களை அவசரத்தில் பிறந்தவர்கள் என நாம் கேலி செய்வதுண்டு.

உண்மையிலேயே குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் தான் சாதனை புரிவர் என்று கூறுகிறது ஆய்வு முடிவுகள்.

37 வாரங்களுக்கு முன்னரே பிறந்த குழந்தையினை குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தை என கூறுகிறோம்.

இவர்களை ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தைகள் என்றும் கூறுவதுண்டு. இந்த குழந்தைகளில் 80 சதவீத பேர் அதிக ஆற்றலுடையவர்களாகவும் வெளிப்படை தன்மையுடையவர்களாகவும் இருக்கின்றனர்.

சராசரி குழந்தைகளை விட இந்த குழந்தைகள் சுறுசுறுப்பாகவும் அதிகமாக பேசி கொண்டும், உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் உறுதியுடன் இருப்பர் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

இவர்கள் அதிக கற்பனை திறனையும் படைப்பாற்றலையும் கொண்டவர்களாகவும், தங்களுடைய வேலையினை சரியாக செய்து முடிப்பவர்களாகவும் இருப்பர்.

குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் அதிபுத்திசாலிகளாக இருப்பர் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூட குறை பிரசவத்தில் பிறந்தவர் தான்.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments