கோடையில் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டியவை

Report Print Meenakshi in குழந்தைகள்

கோடையின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சூட்டினால் உடலில் உள்ள நீர்ச்சத்தானது எளிதில் குறைந்துவிடும்.

நீர்ச்சத்து குறைவதால் எளிதில் குழந்தைகளும், பெரியோர்களும் அதிகம் சோர்வடைவார்கள்.

இதனை தவிர்க்க நாம் அதிகளவு நீர்ச்சத்துள்ள, நோய் எதிர்ப்பு சக்தியினை தரக்கூடிய பழங்களை நாம் அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

வெள்ளரி

கோடைக்காலத்தில் சிறந்த உணவான வெள்ளரி குழந்தைகளின் வயிற்றில் சூட்டை குறைத்து, உடலில் நீர்சத்தானது அதிகரிக்கும்.

சப்போட்டா

வெயில் காலத்தில் உண்டாகும் சூடு காரணமாக வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. சப்போட்டா பழம் கொடுப்பதால் வயிற்றுப்போக்கினை தடுத்து, இரத்த ஓட்டத்தினை சீராக்கும்.

கொய்யாப்பழம்

கொய்யாப்பழத்தில் உள்ள விட்டமின் பி மற்றும் சி யானது குழந்தைகளின் அஜீரண கோளாறுகளை நீக்கி உடல் வளர்ச்சி அடைவதற்கும், எலும்புகள் பலப்படவும் உதவுகிறது.

சாத்துக்குடி

சாத்துக்குடியில் கால்சியமானது நிறைந்துள்ளதால் பல், ஈறு சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கும். மேலும் உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள உதவும்.

2/5

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments