குழந்தைகள் W வடிவில் அமர்வதால் ஆபத்து உள்ளதா?

Report Print Printha in குழந்தைகள்

குழந்தைகள் விளையாடும் போது, அவர்களுக்கு எது சரி, தவறு என்பது தெரியாமல் குறும்புத்தனமாகவும், சந்தோஷமாகவும் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.

எனவே பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொண்டு தவறான பழக்கவழக்கங்களை ஆரம்பத்திலேயே சரிசெய்ய வேண்டும்.

அதிலும் குழந்தைகள் உட்காரும் போது, அவர்கள் உட்காரும் நிலையை சரியாக கவனிக்க வேண்டும். ஏனெனில் சில குழந்தைகள் தவறான நிலையில் அமர்வதால், பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும்.

குழந்தைகள் W வடிவில் அமர்வதால் ஏற்படும் பாதிப்புகள்
  • குழந்தைகள் அமரும் போது, அடிக்கடி W வடிவில் பல மணி நேரம் வரை உட்கார்ந்து விளையாடிக் கொண்டு இருப்பார்கள். அதை உடனே மாற்ற வேண்டும். ஏனெனில் இந்த நிலை குழந்தையின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கிறது.
  • சிறுவயதில் குழந்தைகள் எப்போதும் W வடிவில் உட்கார்ந்திருப்பதால், அது குழந்தையின் இடுப்பு சுழற்சியில், தீவிர எலும்பியல் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
  • குழந்தைகளின் இந்த மாதிரியான அமரும் பழக்கத்தினால், அவர்களின் தசைகளை சிதைவுற்று, சுருங்கி, எலும்புகளின் வளர்ச்சியை கடுமையாக பாதிப்படையச் செய்கிறது.
  • குழந்தைகளின் உடல், அதிகப்படியான புவி ஈர்ப்பு விசையின் விளைவால், அவர்களின் உடற்பகுதியில் உள்ள தசைகளால் உடலை சமநிலையில் பராமரிக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறது.
குறிப்பு

குழந்தைகள் W வடிவில் அமரும் பழக்கத்தைத் தடுக்க வேண்டும். அதற்கு அவர்கள் அமரும் போது, கால்களை நீட்டியோ அல்லது மடக்கியோ அமர்த்த முயற்சி செய்ய வேண்டும்.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments