சீனாவின் ‘இரு குழந்தைகள்’ சட்டத்தையடுத்து மக்கள் தொகையில் சடுதியான உயர்வு

Report Print Thayalan Thayalan in குழந்தைகள்

சீனாவில் அமலில் இருந்த ‘ஒரு குழந்தை’ சட்டம் தளர்த்தப்பட்டதையடுத்து பிறப்பு வீதம் அதிகரித்துள்ளது. இதன்படி, 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு சுமார் பதின்மூன்று இலட்சம் குழந்தைகள் மேலதிகமாகப் பிறந்துள்ளன என்று தெரியவந்துள்ளது.

சனத்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக 1979ஆம் ஆண்டு முதல் ‘குடும்பத்துக்கு ஒரு குழந்தை’ என்ற சட்டத்தை அமல் படுத்தியது சீன அரசாங்கம். இதனால் பிறப்பு விகிதம் குறைவடையத் தொடங்கியது.

எனினும், இந்தச் சட்டத்தால் வயது முதிர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், மத்திய வயதுடையவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால், வேலைக்குச் செல்வோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதுடன் முதியவர்களைப் பராமரிப்பதற்குத் தேவையான மனித வளமும் குறைந்துள்ளது. குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்களே இருப்பதால் அவர்களுக்கு வேலைப் பளுவும், இதனால் மன அழுத்தமும், இவ்விரு காரணிகளால் உடல் நலப் பாதிப்புகளும் உருவாகியுள்ளன.

இதையடுத்து ஒரு தம்பதியர் இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற புதிய சட்டம் 2014ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. இதனால் கடந்த 2016ஆம் ஆண்டு சீனாவின் பிறப்பு விகிதம் சுமார் 7.9 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதன்படி கடந்த ஆண்டு மட்டும் 17.86 மில்லியன் குழந்தைகள் சீனாவில் பிறந்துள்ளன.

எனினும், இந்தப் பிறப்பு விகிதத்தினால் தற்போது சீனா எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு கிடைக்காது என்றும், ஏறக்குறைய அடுத்த சுமார் 25 வருடங்களின் பின்னரே இந்தப் பிரச்சினை ஓயும் என்றும் சீன அரசின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments