தீபாவளி ஸ்பெஷல்! குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?

Report Print Printha in குழந்தைகள்

தீபாவளி என்றாலே புதிய ஆடைகள், விதவிதமான பட்டாசுகள், பலவிதமான பலகாரங்கள் தான் நம் கண்முன்னே வந்து நிற்கும்.

குறிப்பாக குழந்தைகளுக்கு சொல்லவே தேவையில்லை, புத்தாடை உடுத்திக் கொண்டு பட்டாசுகள் வெடித்து மிக உற்சாகமாக கொண்டாடுவார்கள்.

தீபாவளியின் போது பெற்றோர்கள் கவனிக்க வேண்டியவை

  • பட்டாசுகள் வாங்கும் போது நல்ல பிராண்டுகளாக பார்த்து வாங்க வேண்டும். பின் சிறிய குழந்தைகள் எடுக்க முடியாமல் இருக்கும் பாதுகாப்பான இடங்களில் பட்டாசுகளை வைக்க வேண்டும்.
  • குழந்தைகள் பட்டாசுகள் வெடுக்கும் போது, அவர்களுக்கு காட்டன் துணிகளை உடுத்தி, காலில் செருப்புகளை மறக்காமல் போட்டு விட வேண்டும்.

  • விசாலமான பெரிய, வெளி இடங்களில் வெடிகளை வெடிக்க வேண்டும். அதற்கு முன்பு தண்ணீர் மற்றும் மணல்களை முன்னெச்சரிக்கையாக வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.

  • பட்டாசுகள் வெடிக்கும் போது, தீக்காயம் ஏற்பட்டு விட்டால் உடனே காயம்பட்ட இடத்தை சுத்தமான தண்ணீரால் கழுவி, தீ காயத்திற்கான க்ரீமை அதன் மேல் தடவ வேண்டும்.
  • பட்டாசுகள் வெடுக்கும் போது, வெடியின் துணுக்குகள் கண்களில் பட்டு, கண்களில் நீர் வடிதல், எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால், சுத்தமான தண்ணீரில் கண்களை கழுவி கண் சொட்டு மருந்துகளை போட வேண்டும்.
  • வயதானவர்கள் மற்றும் புதிதாக பிறந்த சிறிய குழந்தைகள் இருக்கும் இடத்தில் வெடிகள் வெடிக்கும் பழக்கங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் வெடிகள் வெடிக்கும் சத்தத்தினால் அவர்கள் அதிக பாதிப்பை அடைவார்கள்.
  • வீசிங் உள்ள குழந்தைகளை தீபாவளி நேரத்தில், மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் பாட்டாசுக்களின் புகையினால் அவர்களுக்கு இருமல், ஜலதோஷம் மற்றும் சுவாசக் கோளாறு பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
  • தீபாவளியின் போது குழந்தைகள் பலகாரங்களை அதிகமாக சாப்பிடுவதால், பலவித உடல் உபாதைகளுக்கு ஆளாகிவிடுவார்கள். இதனால் சுக்கு, இஞ்சி காபி, சீரகம் மற்றும் சோம்பு கஷாயம் ஆகியவற்றை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments