நான்கு முதல் ஆறு மாத குழந்தைகளுக்கு இந்த உணவுகளை கொடுங்கள்!

Report Print Printha in குழந்தைகள்

குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான உணவுகளை கொடுத்து பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நான்கு முதல் ஆறு வயதில் உள்ள குழந்தைகளுக்கு எந்தெந்த உணவுகளை கொடுக்க வேண்டும் என்பதை தெரிந்துக் கொள்வோம்!

தானியங்கள்

ஒருசில குழந்தைகளுக்கு அரிசி மற்றும் ஓட்ஸ் போன்ற தானியங்களினால் அலர்ஜி ஏற்படும்.

முதலில் அவகேடோ அல்லது வாழைப்பழத்தை கொடுத்து, பின் தானியங்களை உணவாக கொடுக்க வேண்டும்.

பழங்கள்

குழந்தைகளுக்கு செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் இருந்தால், மென்மையான பழங்களை எட்டு மாதங்களுக்கு முன்பாகவே கொடுக்கலாம். மற்றப் பழங்களை வேகவைத்துக் கொடுக்கலாம்.

காய்கறிகள்

குழந்தைக்கு 12 மாதங்கள் முடிந்த பிறகு, சத்தான காய்கறிகளை எப்போதுமே வேக வைத்துக் கொடுக்க வேண்டும்.

இதனால் குழந்தையின் தொண்டையில் காய்கறிகள் சிக்கிக் கொள்வது தடுக்கப்படுகிறது.

புரதம்

புரதச் சத்துக்கள் அதிகமாக நிறைந்த உணவுகளாக கோழி, மீன் மற்றும் ஆடு போன்ற இறைச்சிகளை நன்றாக வேகவைத்துக் கொடுக்க வேண்டும். சரியாக வேகாத உணவுப் பொருட்கள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

பால் பொருட்கள்

தாய்ப்பாலானது குழந்தைகளுக்கு மிகச் சிறந்த உணவு. எனவே குழந்தைக்கு 12 மாதங்கள் முடியும் வரை தாய்ப்பாலுக்கு பதில் வேறு ஏதும் கொடுக்க கூடாது.

மேலும் இரண்டு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு பால் பொருட்கள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

இதனால் குழந்தைகளுக்கு உடல் ரீதியாக ஏற்படும் பிரச்சனைகள் தடுக்கப் படுகிறது.

குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு கொடுக்கும் உணவுகள்

நன்றாக மசித்த உணவு அல்லது தானியங்களை ஒரு நாளைக்கு 1 டீஸ்பூன் கொடுத்து வர வேண்டும்.

தானியங்கள் கொடுக்கும் போது, 4-5 டீஸ்பூன் தாய்ப்பாலை சேர்த்துக் கொடுக்க வேண்டும்.

ஒரு நாளைக்கு தாய்ப்பால் கலக்கப்பட்ட 1 டீஸ்பூன் தானியத்தை குழந்தைகளுக்கு இரண்டு முறைகள் கொடுக்க வேஎண்டும்.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments