குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள்!

Report Print Printha in குழந்தைகள்

காலநிலைகள் மாறும் போது நம் உடம்பிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டு பலவிதமான நோய்களுக்கு ஆளாகின்றோம், இதனால் நம் குழந்தைகளும் பெரிதளவில் பாதிக்கப்படுகின்றார்கள்.

எனவே இளம் வயதிலேயே பலவித நோய்கள் தொற்றாமல் இருக்க நம் குழந்தைகளைப் பாதுகாக்க நோயெதிர்ப்பு சக்தியை தூண்டும் சத்தான உணவுகளை கொடுக்க வேண்டும்.

அடிக்கடி அந்த உணவுகளை கொடுப்பதன் மூலம் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கும்.

தயிர்

குழந்தைகளுக்கு தினமும் உணவில் தயிரை கொடுக்க வேண்டும். ஏனெனில் தயிரில் உள்ள புரோபயோடிக்ஸ் குழந்தைகளின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவதுடன், நோய்கள் வராமல் தடுக்கின்றது.

கேரட்

கேரட்டில் கரோட்டினாய்டு, ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்ற சத்துகள் உள்ளது. மேலும் இந்த சத்துகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துகிறது. எனவே குழந்தைகளுக்கு கேரட்டை அடிக்கடி கொடுக்க வேண்டும்.

காலிஃப்ளவர்

காலிஃப்ளவரில் நார்ச்சத்து, பைட்டோ கெமிக்கல் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இவை குழந்தைகளின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த சிறந்த உணவாக உள்ளது.

வால்நட்ஸ்

வால்நட்ஸில் உள்ள ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் போன்ற சத்துகள் சுவாச பிரச்சனைகளைத் தடுக்கிறது. மேலும் ஒருசில குழந்தைகளுக்கு அலர்ஜி இருந்தால், வால்நட்ஸைக் கொடுக்க கூடாது.

2/5

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments