குழந்தைகளின் பார்வையை பறிக்கும் லேசர் காட்டிகள்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Report Print Givitharan Givitharan in குழந்தைகள்

விஞ்ஞான தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் பல்வேறு கதிர்களில் லேசர் கதிர்களுக்கு அதிக சக்தி உண்டு என்பது அனைவரும் அறிந்ததே.

இவற்றால் மலைகளைக்கூட உடைக்க முடியும். எனினும் லேசர் கதிர்களின் அதிர்வெண்களை மாற்றுவதன் மூலம் அவற்றின் வலிமையையும் மாற்ற முடியும்.

அவ்வாறு குறைந்த சக்தி உடைய லேசர் கதிர்கள் அன்றாட வாழ்வில் பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

எனினும் இவ் வகை லேசர் கதிர்கள் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என ஆய்வு ஒன்றின் முடிவில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

முறையற்ற விதத்தில் இக் கதிர்களை கண்களை நோக்கி பயன்படுத்துவதனால் விழித்திரைகளில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட 4 சிறுவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ள நிலையில், அச் சத்திர சிகிச்சையை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை மற்றுமொரு சந்தர்ப்பத்தில் 12 மற்றும் 16 வயது சிறுவர்கள் பச்சை, சிவப்பு லேசர் கதிர்களை பயன்படுத்தி விளையாட்டில் ஈடுபட்ட வேளை சில மணி நேரங்களிலேயே கண்பார்வை இழந்தமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments