குழந்தைகளின் அறிவாற்றலை அதிகரிக்கும் கறுவா!

Report Print Givitharan Givitharan in குழந்தைகள்
குழந்தைகளின் அறிவாற்றலை அதிகரிக்கும் கறுவா!
601Shares

உங்கள் குழந்தைகள் பள்ளியில் கற்பித்ததை ஞாபகப்படுத்த தவறுகிறார்களா? கவலை வேண்டாம், கறுவாவை உணவுகளுடன் சேர்த்து உட்கொள்ளுவதால் குழந்தைகளின் அறிவாற்றலை மேம்படுத்த முடியும் என இந்திய ஆய்வாளர் Kalipada Pahan சொல்கிறார்.

இவ் ஆய்வில் குறைந்தளவு ஆற்றலுடைய எலியில், அதன் அறிவாற்றல் மற்றும் ஞாபகசக்தி அதிகரிப்பது இனங்காணப்பட்டுள்ளது.

சிலர் பிறப்பிலேயே ஆற்றலுள்ளவர்களாக திகழ்கின்றனர். சிலர் முயற்சிளால் தங்கள் அறிவாற்றலை மேம்படுத்திக்கொள்கிறார்கள்.

சிலர் முயற்சி செய்தும் புதியவற்றை கற்க இயலாதவர்களாய் போகின்றனர்.

ஆனாலும் மேற்படி ஆய்வில், அறிவாற்றல் உள்ளவர்களில் கறுவா எந்தவொரு விளைவையும் காட்டவில்லை என சொல்லப்படுகிறது.

இங்கு மூளையின் பிற்புற பகுதியில் (Hippocampus) ஏற்படும் மாற்றங்கள் அவதானிக்கப்பட்டிருந்தன.

பொதுவாக ஆற்றல் குறைந்தவர்களில் கற்றலுக்கு பொறுப்பான CREB புரதம் குறைவாக இருப்பது இனங்காணப்பட்டது. இத்துடன் அறிவாற்றலை தடுக்கும் GABRA5 இன் அளவு அதிகமாக இருப்பது இனங்காணப்பட்டது.

எலியில் கறுவா பரிசீலிக்கப்பட்ட போது அது Sodium benzoate ஆக அநுசேபமடைந்தது. இது மூளை சிகிச்சைகளுக்காக பொதுவாக பயன்படுத்தப்படும் இரசாயனமாகும்.

Sodium benzoate மூளையை அடையும் போது அது மேற்படி புரதங்களில் மாற்றத்தை கொண்டுவந்து ஒருவருடைய அறிவாற்றலை அதிகரிப்பது இனங்காணப்பட்டிருந்தது.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments