குழந்தைகள் முன்னிலையில் இதையெல்லாம் செய்யாதீங்க

Report Print Fathima Fathima in குழந்தைகள்
குழந்தைகள் முன்னிலையில் இதையெல்லாம் செய்யாதீங்க

எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னையின் வளர்ப்பினிலே என்ற வரிகள் உங்களுக்கு நினைவிருக்கலாம்.

ஆம், குழந்தையின் வளர்ப்பில் தாய் எவ்வளவு முக்கியமோ அதை விட குடும்ப சூழலும் மிக முக்கிய காரணமாக அமைகிறது.

குழந்தைகள் பெற்றோர்களை பார்த்து தான் ஒவ்வொரு விடயத்தையும் கற்றுக் கொள்கிறார்கள்.

கணவன்- மனைவி சண்டை

கணவன்- மனைவி இடையிலான சண்டை சச்சரவு குழந்தைகளுக்கு தெரியக்கூடாது. அவர்கள் முன்னிலையில் சண்டையிட்டு கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். நீங்கள் தான் உங்க வீட்டு சுட்டிக்கு ஹீரோ என்பதை மறந்துவிட வேண்டாம், உங்களை பார்த்தே குழந்தைகள் வளர்கின்றது.

விமர்சனம் வேண்டாம்

குழந்தைகள் முன்னிலையில் மற்றவர்களை விமர்சிக்க வேண்டாம், உதாரணத்திற்கு உங்கள் நண்பரை அவன் சரியான சோம்பேறி என பேசியிருந்தால் ஒருவேளை அவர் வரும் போது சோம்பேறி மாமா வந்துவிட்டார் என சொல்ல நேரிடலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு எதிர்மறையான எண்ணங்கள் தோன்றும்.

தீய சொற்கள்

தீய சொற்கள் பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்த்து விடுங்கள், உங்களை பார்த்து தான் அவர்கள் பேச கற்றுக் கொள்கிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.

இதேபோல் குழந்தைகள் முன்னிலையில் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது போன்ற கெட்ட பழக்கவழக்கங்களை செய்ய வேண்டாம்.

மிரட்டல் வார்த்தைகள்

சிறு குழந்தைகளை மிரட்டும் போது கொன்னுடுவேன், தலையை வெட்டிவிடுவேன் என்பது போன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்.

இதேபோல் தொலைக்காட்சியில் நல்ல விடயங்களை சொல்லிக் கொடுக்கும் புரோகிராம்களை பாருங்கள். எப்போதும் அழுது வடியும், அடாவடி சீரியல்கள் அறவே வேண்டாம்.

ஒப்பிட்டு பேச வேண்டாம்

ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்திறமை என்று இருக்கும், உங்கள் குழந்தையை மற்றவருடன் ஒப்பிட்டு ஒருபோதும் பேசவேண்டாம், அது அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மையை அதிகரித்து விடும்.

கல்வி

உங்கள் குழந்தைகள் நீங்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை எடுக்கவில்லை என்றால் அதற்காக அவர்களை திட்ட வேண்டாம், அவர்களுடைய பிரச்சனைகளை கண்டறிந்து தீர்க்க வேண்டும்.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments