வெளிநாட்டு ஊழியர்களுக்கு கடும் சிக்கல்: டிரம்ப் அரசு அடுத்த அதிரடி

Report Print Arbin Arbin in வேலைவாய்ப்பு

புதிய ஹெச்-1பி விசா வழங்கும் பணியை அமெரிக்க குடியுரிமை சேவை துறை, சுமார் 6 மாத காலத்திற்கு நிறுத்தி வைத்துள்ளது வெளிநாட்டு ஊழியர்களை கடும் சிக்கலில் தள்ளியுள்ளது.

ஹெச்-1பி விசா மூலமாக வெளிநாட்டை சேர்ந்த ஊழியர்களை அமெரிக்க நிறுவனங்கள் பணிக்கு அமர்த்துகின்றன. வெளிநாட்டு பணியாளர்கள், அமெரிக்க குடிமக்களின் பணியிடத்தை பறிப்பதாக குற்றம்சாட்டி வருகிறார் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்.

எனவே, ஹெச்-1பி விசா வழங்கும் நடைமுறையில் சில மாற்றங்களை ட்ரம்ப் அரசு கொண்டுவந்தது. இந்த நிலையில்தான், அமெரிக்க குடியுரிமை சேவை துறை இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதன்படி, அனைத்து வகை ஹெச்-1பி விசா வழங்கும் நடைமுறையையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கூறப்பட்டுள்ளது. அநேகமாக இது 6 மாத காலம் வரை நீளலாம் என்றும் அறிக்கை கூறுகிறது.

ஏற்கனவே நிலுவையிலுள்ள விண்ணப்பங்களுக்கு ஹெச்-1பி விசா வழங்கும் நடைமுறைக்காக புதிய விசா வழங்கும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், ஹெச்-1பி விண்ணப்பங்கள் வாங்குவது திடீரென நிறுத்தப்பட்டுள்ளது வெளிநாட்டு பணியாளர்கள் இடையே பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments