வங்கியில் பல வாய்ப்பு

Report Print Amirah in வேலைவாய்ப்பு

இலங்கை சேமிப்பு வங்கி

முகாமையாளர் - கிளை

ஒரு பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் / சமமான தொழில்முறை தகுதி / வங்கியில் 5 வருடம் பதவி தகுதி அனுபவம் கிளை அலுவலகத்தில் குறைந்தது இரண்டு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது

AIB / வங்கனி முகாமைத்துவத்தில் டிப்ளமாவுடன் 7 வருடம் பதவி தகுதி அனுபவம் கிளை அலுவலகத்தில் குறைந்தது இரண்டு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது

க.பொ.த (உ/த) பரீட்சையில் பழைய பாடதிட்டத்தின் கீழ் 4 பாடங்களிலும் அல்லது புதிய பாடதிட்டத்தின் கீழ் 3 பாடங்களில் சித்தியடைந்திருப்பதுடன் 15 வருடம் பதவி தகுதி அனுபவம் கிளை முகாமைத்துவத்தில் குறைந்தது 5 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வங்கி உதவி பயிற்சியாளர்

க.பொ.த (உ/த) பரீட்சையில் இரண்டு திறமை சித்தியுடன் சித்தியடைந்திருத்தல் மற்றும் க.பொ.த (சா/த) பரீட்சையில் கணிதம், தமிழ்/சிங்களம் மற்றும் ஆங்கிலம் உட்பட 5 பாடங்களில் திறமை சித்தியடைந்திருக்க வேண்டும். கணினி கல்வி கற்றிருக்க வேண்டும்.

வயது:- 24 வயதைவிட குறைவாக இருக்க வேண்டும்.

உதவி முகாமையாளர்

சட்ட வழக்கறிஞர் மற்றும் அனுமதி பெற்ற பத்திரத்துறை பதிவாளராக இருப்பதுடன் சட்ட நடவடிக்கையில் 4 வருட பதவி தகுதி அனுபவம்.

வணிக அபிவிருத்தி அதிகாரி

க.பொ.த (உ/த) பரீட்சையில் சித்தியடைந்திருப்பதுடன் வங்கி அல்லது புகழ்பெற்ற நிதி நிறுவனத்தில் இரண்டு வருடம் இதேபோன்ற ஒரு பதவிவகித்திருக்க வேண்டும்

வயது:- 35 வயதைவிட குறைவாக இருக்க வேண்டும்.

உதவி முகாமையாளர் - சந்தைப்படுத்தல்

அனுமதிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் தொடர்புடைய துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது நிறுவனம் ஒன்றில் சமமான தொழில்முறை தகுதியுடன் வங்கி / நிதி நிறுவனம் அல்லது வேறு ஏதாவது ஏற்றுக்கொள்ளப்பட்ட நிறுவனத்தில் 6 வருடம் தொழில் தகுதி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்ப முடிவு திகதி 06.-2.2017

மேலதிக தகவல்கள் மற்றும் விண்ணப்ப படிவத்தை www.slsbl.lk என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments