கிழக்கு மாகாண ஆசிரியர் சேவை திறந்த போட்டிப்பரீட்சை முடிவுகள் வெளியானது

Report Print Amirah in வேலைவாய்ப்பு

கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களுக்காக பாடசாலை ரீதியாக இலங்கை ஆசிரியர் சேவை, தரம் 3-I (அ)க்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை – 2016 க்கான பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவதற்கான தகுதியுடையவர்களினதும் மற்றும் தகுதி அற்றவர்களினதும் பெயர் பட்டியல் புள்ளிகளுடன் வெளியிடப்பட்டுள்ளது.

பெறுபேறுகளை www.ep.gov.lk என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments