வட மாகாணத்தை நிரந்தர வதிவிடமாகக் கொண்டவரா? தாமதிக்காதீர்கள்

Report Print Amirah in வேலைவாய்ப்பு

வடக்கு மாகாண பொதுச்சேவையின் கால்நடை அபிவிருத்திப் போதனாசிரியர்தரம் iii மற்றும் பயிற்சித் தரம் பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2017

கால்நடை அபிவிருத்திப் போதனாசிரியர் தரம் iii இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2017

தகைமைகள் :-

க.பொ.த (சா/த) பரீட்சையில் ஒரே அமர்வில் மொழி அல்லது இலக்கியம் (தமிழ் / சிங்களம் / ஆங்கிலம்), கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்கள் உள்ளடங்கலாக நான்கு (04) பாடங்களில் திறமைச் சித்திகளுடன் ஆறு (06) பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும்.

அத்துடன்

க.பொ.த (உ/த) பரீட்சையில் உயிரியல், இரசாயனவியல், விவசாயம், பௌதீகவியல், உயிரியல் தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானத்திற்கான தொழில்நுட்பம் ஆகிய பாடங்களில் இரண்டு (02) பாடங்கள் உட்பட மூன்று (03) பாடங்களில் ஒரே அமர்வில் சித்திபெற்றிருத்தல் வேண்டும். (பழைய பாடத்திட்டமாயின் மூன்று (03) பாடங்கள் சித்தியடைந்திருத்தல் போதுமானதாகும்)

கால்நடை அபிவிருத்திப் போதனாசிரியர் பயிற்சித் தரத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2017

தகைமைகள் :-

க.பொ.த (சா/த) பரீட்சையில் ஒரே அமர்வில் மொழி அல்லது இலக்கியம் (தமிழ் / சிங்களம் / ஆங்கிலம்), கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்கள் உள்ளடங்கலாக நான்கு (04) பாடங்களில் திறமைச் சித்திகளுடன் ஆறு (06) பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும்.

அத்துடன்

க.பொ.த (உ/த) பரீட்சையில் உயிரியல், இரசாயனவியல், விவசாயம், பௌதீகவியல், உயிரியல் தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானத்திற்கான தொழில்நுட்பம் ஆகிய பாடங்களில் இரண்டு (02) பாடங்கள் உட்பட மூன்று (03) பாடங்களில் ஒரே அமர்வில் சித்திபெற்றிருத்தல் வேண்டும். (பழைய பாடத்திட்டமாயின் மூன்று (03) பாடங்கள் சித்தியடைந்திருத்தல் போதுமானதாகும்)

அத்துடன்

பின்வரும் தொழிற்த் தகைமைகளில் ஏதாவது ஒன்றைக் கொண்டிருத்தல் வேண்டும்.

01. அநுராதபுரம், குண்டசாலை ஆகிய விலங்கு பரிபாலன பயிற்சிப் பாடசாலைகளில் அல்லது விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழுள்ள வேறு ஏதாவது பயிற்சிப் பாடசாலைகளில் இருந்து 'விலங்கு பரிபாலனம்' (Animal Husbandry) சம்மந்தமான இரண்டு வருட கற்கைநெறியில் டிப்ளோமாச் சான்றிதழினை பெற்றிருத்தல் வேண்டும்.

அல்லது

02. வடக்கு மாகாண தொழில்நுட்பச் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட வேறு ஏதாவது இதற்குத் சமனான மேற்படி தொழில்நுட்பத் தகைமைகள், அது தொடர்பாக மேற்படி குறிப்பிட்ட தொழில்நுட்பத் தகைமைகளுக்கு சமமானது என அச்சான்றிதழை வழங்கும் கல்வி அமைச்சு அல்லது வேறு நிறுவனங்களில் இருந்து உறுதிப்படுத்துதல் அவசியமாகும்.

வயது:-18 வயதிற்கு குறையாதவராகவும், 40 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப முடிவு திகதி:- 2017.02.09

மேலதிக தகவல்களை www.np.gov.lk என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்

விண்ணப்ப படிவம்

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments