அரசாங்க தகவல் திணைக்களம்
முகாமைத்துவ உதவியாளர்
கல்வித் தகைமை:-
க. பொ. த. சாதாரணதரப் பரீட்சையில் ஒரே தடவையில் சிங்களம்/ தமிழ்/ ஆங்கிலம், கணிதம் மற்றும் மேலும் இரண்டு திறமைச் சித்திகளுடன் 6 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
க. பொ. த. உயர்தரப் பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் (பொது அறிவுப் பரீட்சை தவிர்ந்த) ஒரே தடவையில் சித்தி அடைந்திருத்தல் வேண்டும். (பழைய பாடவிதானங்களின்கீழ் 3 பாடங்களில் ஒரே தடவையில் சித்தி அடைந்திருக்க வேண்டும்.)
தொழிற்தகைமை:- இரண்டாம் நிலை மற்றும் முதன்நிலை கல்வியியல் ஆணைக்குழுவின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றின் மூலம் வழங்கப்படுகின்ற தகவல் தொழில்நுட்பம் தொடர்பான டிப்ளோமாவினைப் பெற்றிருத்தல் அல்லது தகவல் தொழில்நுட்பத் துறையில் அதற்கும் மேலான தகைமையைப் பெற்றிருத்தல்.
அல்லது
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட பொது மக்கள் தொடர்பாடல் தொடர்பாக டிப்ளோமா ஒன்றினைப் பெற்றிருத்தல் மற்றும் பொது மக்கள் தொடர்பாடல் துறையில் அதற்கும் மேலான தகைமையினைப் பெற்றிருத்தல்.
அனுபவங்கள்.- கவனத்திற் கொள்ளப்படமாட்டாது.
விண்ணப்ப முடிவு திகதி 2016.10.01
மேலதிக தகவல்களை 2016.12.09 ஆம் திகதி வர்த்தமானியில் பெற்றுக்கொள்ளலாம்.