இதை கொஞ்சம் கவனித்தீர்கள் என்றால் உங்களுக்கும் வேலை நிச்சயம்

Report Print Amirah in வேலைவாய்ப்பு

வேலை பெற்றுக்கொள்ளும் விடயத்தில் நேர்முகத்தேர்வு என்பது மிக முக்கியவிடயமாகும். உங்களுடைய கல்வித் தகுதி, திறமை, அனுபவம் எல்லாவற்றையும் விட நேர்முகத் தேர்வில் நீங்கள் நடந்துக்கொள்ளும் முறை தான் முக்கியமாகின்றது.

 • நேர்முகத்தேர்வில் பதில் சொல்லும்போது, அவர்களைப் பார்த்துப் பதில் சொல்ல வேண்டும். அதற்காக கண்களை அடிக்கடியோ அல்லது அதிக நேரமோ பார்த்துப் பேசாதீர்கள்.
 • கட்டாயம் நிமிர்ந்திருந்தே பதிலளிக்கவும்.
 • நேர்முகத்தேர்வின்போது அதிகமாக அசைவதைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
 • அவர்கள் கோட்கும் கேள்விகளுக்கு உங்களுக்கு சரியான பதில் தெரியாவிட்டாலும் தெரிந்த பதிலை மிகவும் அழுத்தமாகச் சொல்லுங்கள். எல்லாக் கேள்விகளுக்கும் அழுத்தமாகப் பதில் கொடுங்கள்.
 • நீங்கள் செல்லும் வேலை சம்பந்தமான technical வார்த்தைகளை அதிகம் பயன்படுத்தவும்.
 • உங்களுடைய பலவீனம் என்ன என்ற கேள்விக்கு இப்போது உங்களிடம் இருக்கும் பலவீனத்தை குறிப்பிட்டு அதனை நிவர்த்தி செய்வதற்கு செய்யும் முயற்சிகளைக் குறிப்பிடுங்கள்.
 • குறைந்தது இரண்டு பலவீனத்தையாவது குறிப்பிட்டு அவற்றை எவ்வாறு நிவர்த்தி செய்தீர்கள் என்றும் முடிந்தால் அல்லது சந்தர்ப்பம் அமைந்தால் எவ்வளவு காலத்தில் நிவர்த்தி செய்தீர்கள் என்றும் குறிப்பிடுங்கள்.
 • எல்லா பலவீனத்தையும் நிவர்த்தி செய்துவிட்டதாகக் கூறாதீர்கள்.
 • கடந்த காலங்களில் நீங்கள் சந்தித்த பிரச்சினைகள், சிக்கல்கள் போன்றவற்றையும் குறிப்பிட்டு அவற்றை எவ்வாறு கையாண்டீர்கள் என்றும் குறிப்பிடத் தவறாதீர்கள்.
 • அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிப்பதோடு மட்டும் நின்றுவிடாது அவர்கள் கேட்ட கேள்விகள் சம்பந்தப்பட்டதாக நீங்களும் சில விடயங்களை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
 • தேர்வுக்குப் போவதற்கு முன்னரே, இவ்வாறான கேள்விகளுக்கான பதில்களை எழுதிப் படிப்பது மிகவும் உதவும். பலர்தே ர்வுக்குச் செல்வதற்குச் சில மணிநேரங்களுக்கு முன்னர்தான் இதைப் பற்றி யோசிப்பார்கள்.
 • மிகவும் முக்கியமானது, நீங்கள் போகும் கம்பனி பற்றி அறிந்திருப்பதுதான். வேலைக்கு விண்ணப்பிக்கும்போதே அறிந்து வைத்திருப்பது நல்லது.
 • நேர்முகத் தேர்விற்கு 15-20 நிமிடங்களுக்கு முன்னரே கம்பனிக்குள் செல்லுங்கள். அதற்கும் அதிக நேரம் முன்னர் சென்றுவிட்டாலும் வேறெங்காவது இருந்துவிட்டு 15-20 நிமிடங்களுக்கு முன்னர் அந்தக் கட்டத்திற்குள் அல்லது கம்பனிக்குள் செல்லுங்கள்.
 • நீங்கள் அங்கு சென்று காலடி வைக்கும் நிமிடத்திலிருந்து உங்கள் நேர்முகத் தேர்வு ஆரம்பம். ஏனெனில் உங்களை அவதானிக்கும்படி மற்றவர்களுக்கும் அறிவுறுத்தியிருக்கலாம்.
 • அங்கு காத்திருக்கும் நேரத்தில் நிமிர்ந்து அமர்ந்திருங்கள். பயத்துடன் இருப்பதாகவோ அல்லது மிகவும்சாதாரணமாக இருப்பதாகவோ காட்டிக் கொள்ள வேண்டாம்.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments