சுயவிபரக் கோவை: வேலை தேடும் படலத்தின் அத்திவாரம்

Report Print Amirah in வேலைவாய்ப்பு

வேலை தேடும் போது, அந்த வேலை கிடைப்பதையும் கிடைக்காமல் விடுவதையும் தீர்மானிப்பதில் அதி முக்கிய பங்கு வகிப்பது உங்களது சுய விபரக்கோவை ஆகும்.

உங்களது சுயவிபரக் கோவை வாசிப்பவரின் மனதில் இவர் என்ன படித்திருக்கிறார், எங்கு, என்ன மாதிரியான வேலைகள் செய்திருக்கிறார், என்ன மாதிரியான நிபுணத்துவ அங்கீகாரம் (eg professional bodies such as CPA) வைத்திருக்கிறார், என்ன மாதிரியான கணணி அனுபவம் இருக்கிறது, என்னிடம் இருக்கும் வேலையை இவரால் செய்ய முடியுமா போன்ற கேள்விகள் எழும்

இவை அனைத்திற்கும் அவர் திருப்திகரமாக முடிவெடுக்க வைக்க வேண்டியது உங்களது சுயவிபரக் கோவையின் வேலை. எனவே நேரம், தேவைப் படின் பணம் செலவழித்து சிறந்ததொரு சுயவிபரக் கோவை உருவாக்குவது வேலை தேடும் படலத்தின் அத்திவாரம் எனக் கூறலாம்.

சராசரியாக ஒரு சுயவிபரக் கோவைப் பார்க்க ஒரு தொழில் வழங்குனர் செலவழிக்கும் நேரம் 10 - 15 செக்கன் எனக் கூறுகிறார்கள். இந்த மிகக் குறுகிய நேரத்தில் பல சுயவிபரக் கோவைகளைப் பார்க்கும் போது உங்களது மற்றவர்களினதிலும் பார்க்க சிறப்பாக இருக்க வேண்டும்.

இதற்காக சில விடயங்களை கவனிக்க வேண்டும்.

  • சுயவிபரக் கோவையில் தேவையில்லாத விடயங்களை நீக்கி இரத்தினச் சுருக்கமாக உங்களின் கல்வித் தகமைகள், பட்டங்கள், (தகமை பெற்றுக்கொண்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனம், பெற்ற வருடம் அவசியம்) அங்கு நீங்கள் செய்த வேலைகள், உங்களுக்கு பரிட்சயமான தொழில் சார் கணினி அறிவு பற்றிய விபரங்களை உள்ளடக்க வேண்டும்.
  • தொடர்பாடல் (Refree) விபரங்களையும் உள்ளடக்க வேண்டும். சிலர் Refree's provided on request என விட்டுவிடுவார்கள். ஆனால் தொழில் வழங்குனர்கள் தனிப்பட refree விபரங்கள் உள்ளடக்கியவர்களை விரும்புவதுண்டு. இவர்களுக்கு தன்னம்பிக்கை, சவால்களை எதிர்நோக்கும்த ன்மை அதிகம் என்பது நிச்சயமாகும். அத்துடன் அவர்கள் வேலை அவசியம் என்றால் refree விடயங்களை முதலே துணிவாக தந்திருக்கலாம் என யோசிப்பதுண்டு.
  • உங்களின் சுயவிபரக் கோவையின் அமைப்பு (format) முக்கியமானது. பலவகையான மாதிரி அமைப்புக்கள் இணையத்தில் கிடைக்கின்றன. ஆனால்த யவுசெய்து வெட்டி ஒட்டாதீர்கள் (coppy , past). பல நூறு சுயவிபரக் கோவைகள் வந்து குவியும் போது வெட்டி ஒட்டிய சுயவிபரக் கோவைகளைப்பா ர்க்கப் புரியும். ஒரே மாதிரி பல இருக்கும் போது அதில் சில வசனங்கள் / சொற்களை கூகிள் பார்க்கும் போது, அல்லது sample CV / resume எனப் போடும் போது அவர்களின் வடிவத்தை எங்கிருந்து எடுத்தார்கள் என்பது விளங்கி விடும். ஆக்கத்திறன் (creativity) இல்லாதவர்கள் என தவிர்ப்பார்கள்.
  • இன்னொரு முக்கிய விடயம் எழுத்துப் பிழை, இலக்கணம் பிழை அறவே இருக்கக் கூடாது. உங்கள் சுயவிபரக் கோவை அச்சிட்டு (print) வாசியுங்கள். கணினித் திரையில் வாசிக்கும் போது எழுத்துப் பிழைகளைக் கண்டு பிடிப்பது கடினம்.
  • கணினி பிழை என்று சொல்லும் எல்லா சொற்களையும் மாற்ற வேண்டாம். நீங்கள் கணனியில் பாவிக்கும் ஆங்கிலம் (US/UK) வித்தியாசமாக இருந்தால்க ணனி பிழை இல்லாததையும் பிழை எனத்தான் கூறும். மிக இலகுவான உதாரணம் US ஆங்கிலத்தில் maximization UK ஆங்கிலத்தில் maximisation. இந்த "z", "s" தவறுகளை கவனமாகப் பாருங்கள்.
  • நல்ல ஆங்கில அறிவுள்ள நண்பர்களிடம் சரிபார்க்கும் படி கொடுங்கள். எழுத்துப் பிழைகளுடன் வரும் சுயவிபரக் கோவைகள் வேலை வழங்குபவர்களுக்கு எரிச்சலைக் கொடுப்பதுடன் உடனடியாகவே குப்பைக் கூடைக்குள் சென்று விடும்.
  • உங்கள் நம்பர்களின் சுயவிபரக் கோவைகளையும் பிரதி பண்ணாதீர்கள். அவர்கள் அதைப் பல வேலைகளுக்கும் அனுப்பி இருப்பார்கள், நீங்கள் அதைப் பிரதி பண்ணும் போது ஒரு மாதிரியான சுயவிபரக் கோவை வேலை வழங்குநர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
  • உங்களது சுயவிபரக் கோவையையும் எல்லோருக்கும் கொடுக்காதீர்கள். முக்கிய பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் போது உங்களைத் தவிர மற்ற அனைவருமே உங்களுக்குப் போட்டியாளர்கள். நீங்கள் இல்லாவிட்டால் அவர்களுக்கு வேலை, எனவே சில இறுக்கமான முடிவுகள் அவசியம்.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments