இணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்க விருப்பமா?

Report Print Amirah in வேலைவாய்ப்பு

இணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்க விருப்பமா? அப்படியானால் எம்மிடம் இருக்க வேண்டிய சில அடிப்படையான விடயங்கள்.

  • இணைய இணைப்பு

நீங்கள் சரியாக வேலைகளை தெரிந்தெடுத்தால் இணைய இணைப்பு சிறப்பாக இருக்க வேண்டும். இணைய இணைப்பில் சிக்கல் வேலை செய்வதிலும் பிரச்சினை ஏற்படும்.

  • கணினி

உங்களிடம் சொந்தமா ஒரு கணினி இருப்பது நல்லது. அலுவலக கணினியை எதிர் பார்த்தால் கொஞ்சம் கஸ்டம்.

  • நேரம்
இது இணையத்தில் வேலை செய்ய என்று மட்டுமல்லாமல் எங்கு வேலை செய்வதானாலும் நேரம் என்பது முக்கியமானது. ஆங்கிலத்தில் Quality time என்று சொல்லுவார்கள், அந்த நேரம் எமக்கு தேவை. தினமும் உங்களிடம் இரண்டு மணத்தியாலம் Quality time இருக்குமானால் கூட உங்களால் இணையத்தில் சிறப்பாக வேலை செய்ய முடியும்.
  • Profile

எமக்கு வேலைதருபவர்கள் எங்களது விண்ணப்பத்தை பார்த்த பின்னர் எம்மைப்பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள பொதுவாக விரும்புவார்கள் எனவே Elance அல்லது GetAFreelancer தருகின்ற எமது Profile பக்கத்தை முடிந்தளவு சிறப்பாக பேணுதல் வேண்டும்.

Profile இல் கவனிக்க வேண்டிய விடயங்கள்.

புகைப்படம்:- பொதுவாக நாங்கள் எங்கள் வலைப்பதிவுகளில் புகைப்படங்களை பொதுவில் வைக்க விரும்புவதில்லை. ஆனால் இணையத்தளமூடாக வேலை செய்யும் போது எமது சொந்த புகைப்படம் இருப்பது சிறந்தது. பொதுவாக எமது புகைப்படம் எம்மை நன்கு அறிந்தவர் போன்ற உணர்வை வேலை தருபவருக்கு ஏற்படுத்தும். இது மிக முக்கியமானது.

குறிச்சொற்கள்:- வேலை தருபவர்கள் பொதுவாக சிறந்த வேலையாட்களை தேடிக்கண்டுபிடிக்க விரும்புவார்கள். எனவே அவர்கள் அதற்கான தேடலை செய்யும் போது நாங்கள் வரிசைப்படுத்தப்பட வேண்டுமாயின் எமது குறிச்சொற்கள் எம்மை பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருக்கவேண்டும்.

Tagline:- இதனை பொதுவாக நம்மவர்கள் நன்கு பயன்படுத்துவதில்லை. Tagline இல் சரித்திரம் எழுதுபவர்களும் இருக்கிறார்கள். Tagline எமது திறமையை இரண்டு மூன்று சொற்களில் நச்சென்று சொல்லுவதாக இருக்க வேண்டும்.

எம்மைபற்றிய விபரம்:- Elance போன்ற இணையத்தளங்களுடாக வேலைதருபவர்கள் உங்கள் திறமையைத்தான் எதிர்பார்ப்பார்களே தவிர நீங்கள் எங்கு படித்தீர்கள் திருமணமானவரா இல்லையா என்று எதிர்பார்ப்பதில்லை.

எனவே அவ்வாறன விடயங்களை பொதுவாக விபரத்தில் இடத்தேவை இல்லை. சிலர் தமது விபரத்தில் தமது சுயவிபரக்கோவையை அப்படியே இடுவதுண்டு. ஆனால் அது நல்ல விளைவுகளை கொண்டு வரமாட்டாது. மதம் சார்ந்த விடயங்களை இணைப்பது பொதவாக நல்லதல்ல. சில நிறுவனங்கள் வேலை தரும்போது இப்படியான விடயங்களை எதிர்பார்த்தால் அவர்களுக்கு மட்டும் அவற்றை கொடுத்தால் போதுமானது.

  • Portfolio

பொதுவாக இணையத்தள வடிவமைப்பவர்கள் அல்லது சின்னங்கள், பதாகைகள், அழைப்பிதழ்கள் வடிவமைப்பவர்கள் தங்கள் Portfolio ஒன்றினை வைத்திருப்பது பயன்தரும். ஏனெனில் பொதுவாக வேலை தருபவர்கள் நீங்கள் செய்த முன்னைய வேலைகளை பார்க்க ஆர்வமாயிருப்பார்கள்.

Elance போன்ற இணையத்தளங்கள் அங்கத்தவர்களுக்கு இதுபோன்ற வசதிகளை செய்து தந்தாலும், தனியாக portfolio ஒன்றினை வைத்திருப்பது அதிக பயன் தரும்.

ஏனைய வேலைகள் செய்பவர்களும் உதாரணமாக முகாமைத்துவம், சட்டம், மொழிபெயர்ப்பு, தள மேலாண்மை செய்பவர்களும் அவர்களுடை கடந்தகால வேலைகளை வெளிப்படுத்தும் வகையில் கட்டாயம் ஒரு Portfolio வைத்திருக்க வேண்டும்.

இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் portfolio பார்த்தவுடன் புரியக்கூடியதாக சரியாக வகைப்படுத்தி வரிசைப்படுத்தி உங்கள் கடந்த கால வேலைகளை வெளிப்படுத்த வேண்டும். ஒருவர் உங்கள் portfolio இற்கு வந்து ஆராய்ச்சி செய்துதான் அவற்றை அறிய வேண்டும் என்றிருந்தால் நீங்கள் அவ்வாறொன்றை வைத்திருப்பதில் பயனில்லை.

  • துறைசார் மேம்படுத்தப்பட்ட அறிவு

மேம்படுத்தப்பட்ட அறிவு என்றால் பெரிய ஒரு விடயம் இல்லை. நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரிந்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு உங்களுக்கு HTML மொழி தெரியும். அதில் இணையத்தளங்களை வடிவமைக்கின்ற வேலைகளை நீங்கள் செய்ய விரும்பினால் உங்களுக்கு HTML தொடர்பா உலகத்தில் என்னென்ன நடந்து கொண்டிருக்கிறது என்கின்ற விடயம் தெரிந்திருக்க வேண்டும்.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments