நேர்முக தேர்வில் இவ்வாறு கேட்டால் எவ்வாறு பதில் அளிப்பீர்கள்

Report Print Amirah in வேலைவாய்ப்பு

நேர்முக தேர்வின் போது உங்களிடம் இவ்வாறான கேள்விகள் கேட்டால் எவ்வாறு பதில் அளிப்பது.

உங்களைப் பற்றிய விபரம் கூறுங்கள்?

இந்தக் கேள்வி, உங்களைப் பற்றிய சுய விபரம் சம்பந்தப் பட்டதா இருக்கும். அதாவது உங்கள் பெயர், இடம், கல்வித் தகைமை, தொழில்நுட்பத் தகுதி பற்றி நீங்களே தொகுத்து சொல்ல வேண்டும். (அதற்காக வேண்டி உங்களுடைய வரலாறு முழுவதும் சொல்லாதீர்கள்)

உங்களைப் பற்றி சிறு விளக்கம் கூறுங்கள்?

இந்த கேள்வியும் முதல் கேள்வியும் ஒரே மாதிரியாக தோணலாம். ஆனால் இது உங்களுடைய சுய விபரம் பற்றி அல்ல, உங்கள் குணநலன் பற்றியது. அதாவது நீங்க எப்படிப்பட்டவர் என்று சுருக்கமா சொல்லணும்.

இதற்கு முன் பணிபுரிந்த அனுபவம் பற்றி கூறுங்கள்?

அனுபவம் என்பது பெரும்பாலான நிறுவனங்களில் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இதைப்பொறுத்து வேலை வாய்ப்புகள் அமையும் சூழலும் உருவாகிடுச்சு.

பொழுதுபோக்கு அம்சங்கள் என்ன?

தூங்குவேன், டிவி பாப்பேன்டு பதில் சொல்லக் கூடாது, அவர்களை கவரக் கூடிய மாதிரியான, பொழுதுபோக்கு அம்சங்களை சொல்ல வேண்டும். அதற்காக வேண்டி நமக்குத் தெரியாத விசயங்களைப் பற்றி சொல்லி விட்டு முழிகக் கூடாது. ஏன் என்றால் கேள்விகள் அதை பற்றியும் கேட்கக் கூடும்.

ஏற்கனவே பணி செய்த நிறுவனத்திலிருந்து விலகக் காரணம்?

“அதிகமா லீவு போட்டேன், அதுனால அவர்களே விலக்கிட்டாங்க”ன்டு ரொம்ப நேர்மையா பதில் சொல்லக்கூடாது. உங்ளை ரொம்ப நல்லவர் என்று நினைக்க கூடிய மாதிரியான காரணத்தை சொல்ல வேண்டும்

இந்த நிறுவனத்தில் உங்களது பங்களிப்பு என்னவாக இருக்கும்?

இது உங்களோட உழைப்பு பற்றிய கேள்வி. நீங்க இதுக்குக் கொடுக்கும் பதில் அவர்களுக்கு உங்கள் மேல் நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்த வேண்டும்.

என்ன சம்பளம் எதிர்பார்க்குறீர்கள்?

இது ரொம்பவே முக்கியமான கேள்வி. கூடுமானவரை நாம் அமைதியாக இருப்பது நல்லது. ஏன் என்றால் நாம் குறிப்பிடும் தொகை, ஒருவேளை அவர்கள் நிர்ணயித்ததை விட குறைவானதாக இருக்கலாம். (என்னுடைய வேலையை பொருத்து சம்பளம் கொடுங்கள் என்று செல்லலாம்.)

உங்கள் பலம், பலவீனமாக எதனைக் கருதுகிறீர்கள்?

இது உங்களை நீங்கள் எந்த அளவுக்குப் புரிஞ்சு வைத்திரிக்கிறீர்கள் என்பதை காட்ட உதவும். அது மட்டுமல்லாமல், உங்களுடைய நடத்தையை எடை போட உதவும்..

இந்த நிறுவனம் பற்றி உங்களுக்குத் தெரிந்த தகவல்கள் என்ன?

இது மிக முக்கியமான கேள்வி. குறிப்பிட்ட வேலைக்கு விண்ணப்பிக்கும் போது, அந்த நிறுவனம் பற்றியும், அந்த வேலை பற்றியும் தெளிவாக தெரிந்து வைத்திருப்பது அவசியமானது.

பணிநிமிர்த்தம் பயணம் செய்ய சம்மதிப்பீர்களா?

வேலை காரணமா, சில நாள் வெளியூர் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். அதுக்கு நீங்கள் தயாரா இருக்கிறிர்களா என்று முன்னாடியே தீர்மானித்து வைத்திருப்பது அவசியம்.

முந்தைய நிறுவனத்தில் ஏதேனும் இக்கட்டான சூழ்நலையை கையாண்ட அனுபவம் உண்டா?

வேறு நிறுவனத்தில் வேலைபார்த்த அனுபவம் இருந்தது என்றால் இந்தக் கேள்விக்கான பதில், நம்து திறமையை யூகிக்கச் செய்யும்.

தனித்து செயல்பட விருப்பமா? அல்லது குழுவாக செயல்பட விருப்பமா?

இது நிங்கள், உங்கள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பொறுத்து பதிலளிக்க வேண்டும்.

இங்கு வேலை கிடைக்காத பட்சத்தில் உங்களுடைய பிரதிபலிப்பு என்னவாக இருக்கும்?

இது உங்களுடைய விடா முயற்சி, நம்பிக்கை பற்றிய கேள்வியாக இருக்கும். இந்த பதிலை வைத்துக் கூட வேலை கிடைக்கலாம்.

எவ்வளவு காலம் இங்கே பணி செய்யத் தயாராக இருக்கிறீர்கள்?

இதற்க்கு குறிப்பிட்ட கால வரையறை எதுவும் சொல்லாமல், கடைசிவரைக்கும் இருப்பேன் என்று சொல்லணும். தொடர்ந்து வேலை செய்ய முன் வரும் பட்சத்தில் வாய்ப்புகள் தரப்படலாம்.

உங்களுக்கு, எங்களிடத்தில் கேட்கவேண்டிய கேள்விகள் ஏதாவது இருக்கின்றனவா?

இது, நிறுவனம் அல்லது பணி பற்றி, நமக்கு ஏதாவது சந்தேகங்கள் இருக்கிறதா என்ற நோக்கத்தில் கேட்கப்படுகிறது.சந்தேகங்கள் இருந்தால் திறம்பட கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். இந்தக் கேள்வியில் இருந்தும் நமது, தெரிந்துகொள்ளும் ஆர்வம் ஆராயப்படும்.

நிறுவனங்களப் பொறுத்து, இன்னும் பல கேள்விகள் கேட்கப்படலாம். கேள்விகள் எதுவாக இருந்தாலும் தைரியமாக, தடுமாற்றமில்லாமல் நாம் கூறும் பதில்கள் ரொம்பவே அவசியம். நம்மிடமிருந்து வெளிப்படும் பதில்கள், சம்பந்தப்பட்டவர்க்கு திருப்தியளிக்கும் பட்சத்தில், அதற்கான பலன் நிச்சயம் சார்பாக அமையும்.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments