கவர்ச்சிகரமான சம்பளம் கிடைக்கும் IT துறையில் ஐந்து தொழில்கள்

Report Print Amirah in வேலைவாய்ப்பு

இன்றைய உலகில் பெரும்பாலானோர் வேலை தேடி அழைகின்றனர். அந்த நிலையில் அதிகமானோரால் விரும்பப்படுவது 'IT வேலை' சிலர் தங்களது வாழ்க்கையே IT வேலையை நம்பியே இருக்கிறார்கள். அதிக சம்பளம் பெறக் கூடிய IT சம்பந்தமான தொழில்கள் சில

Software Developer (சாப்ட்வேர் டெவெலப்பர்)

இந்த வேலையை பெரும்பாலானோர் செய்கிறார்கள். இருந்தாலும், இதன் அடிப்படையான ஜாவா, .நெட், மொபைல் அப்ளிகேசன், ஷேர் பாயிண்ட், வெப் அப்ளிகேசன் என பல்வேறு துறைகள் இதில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏதாவதொன்றை குறிப்பிட்டு தேர்ந்தெடுத்து, அதில் சிறப்பாக செயல்பட்டாலே போதும்.

IT Analyst (IT அனலிஸ்ட்)

சிலர் இம்மாதிரியான வேலைவாய்ப்பு இருப்பதையே மறந்திருப்பார்கள். அல்லது தெரியாமலே இருக்கும். இதும் ஒரு நல்ல வேலைவாய்ப்புதான். சம்பளங்களும் நன்றாகவே இருக்கும்.

இந்த வேலையைப்பொருத்தவரை பெரிய தரவுகளுடன் நாள்தோறும் போராடவேண்டியிருக்கும். மற்றபடி அருமையான வேலை.

Technical Support (டெக்னிகல் சப்போர்ட்)

எப்பொழுதும் அதிகஅளவு வேலைவாய்ப்புகள் இருப்பது இந்தத்துறையில் தான். இதை உதாசீனப்படுத்தாமல் இருப்பது நலம்தரும். தக்க சமயங்களில் இம்மாதிரியான வேலைகள் கைகொடுக்கும்.

Software Quality Assurance (சாப்ட்வேர் குவாலிட்டி அசூரன்ஸ்)

சில நேரங்களில் இதை டெஸ்டிங் எனவும் சொல்கிறார்கள். குறைந்த அளவு வேலைவாய்ப்புகள் இருப்பினும், இதில் சற்றே அறிவுள்ளவராக இருந்தால் சம்பளங்கள் லட்சங்களில் என்பதும் வேலை பறிக்கப்பட வாய்ப்புகள் குறைவென்பதும் மறுக்க முடியாத உண்மை.

System admin (சிஸ்டம் அட்மின்)

வேலையும், வேலை வாய்ப்புகளும் குறைவுதான். ஆனாலும் மிகவும் நல்லவேலை. இதில் பல பிரிவுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் சிஸ்டம் அட்மின் ஆகவேண்டும் என நினைக்கும்பொழுது கூடவே நெட்வொர்க், செக்யூரிட்டி ஆகியவற்றிலும் கவனம்செலுத்தினால் உங்களை அசைத்துப்பார்க்க ஆளே இல்லை எனலாம்.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments