அதிக சம்பளம் வாங்கும் அழுக்கான தொழில்கள்

Report Print Amirah in வேலைவாய்ப்பு

1.குற்றச் செயல் நடந்த இடத்தை துப்பரவு செய்பவர் (Crime scene cleaner)

இது அதிகமாக காவல்துறை சார்ந்த வேலை.

கொலைகளும், தற்கொலைகளும் அதிகமாக இரத்தம் சிந்தக் கூடிய சந்தர்ப்பங்கள்... அந்த வேளைகளில் இவர்கள் அந்த இடத்தை துப்பரவு செய்ய வேண்டும்...

விபத்தின் அளவைப் பொறுத்து துப்பரவு செய்ய சில மணித்தியாலங்களிலிருந்து சில நாட்கள் வரை எடுக்குமாம்.

2. நீர்க்குழாய் பழுது பார்ப்பவர் (Plumber)

வெளி நாடுகளில் அதிக சம்பளம் பெறும் இலகுவான தொழில் இதுதானாம்...

நீர்க்குழாய் (Water Tap) உடைந்தால் கூட ஒரு ப்ளம்பர் வந்து தான் செய்ய வேண்டும் என எதிர்ப் பார்ப்பார்களாம்...

அமெரிக்காவில் ஒரு சாதாரண ப்ளம்பர் வருடத்துக்கு சராசரியாக $47000 உழைக்க முடியுமாம்.

3.உடலை பதப்படுத்துபவர் (Embalmer)

அதிகமான சமயங்களை சார்ந்தவர்கள் இறந்தவர்களின் உடலை வைத்து சடங்கு செய்ய வேண்டியவர்கள். அவர்களின் தேவைக்காக வேலை செய்பவர்கள் இவர்கள்.

இந்த உடலை பதப்படுத்தும் செய்முறைக்கு ஆதாரமானது பண்டைய எகிப்தியர்கள் செய்த "மம்மி" ஆக்கும் தந்திரம் தானாம்...

4.நிலக்கரி அகழ்பவர் (Coal Miner)

குப்பை அள்ளுதல், மீன்பிடித்தல் போன்றவற்றுடன் ஒப்பிடும் போது இதுவும் இன்றைய காலத்தில் ஆபத்தான ஒரு தொழிலாகும்...

அதிலுள்ள மெதேன் உடலுக்கு ஆபத்தானது. மேலும் வெடிப்பு சம்பவங்களும் நடக்க வாய்ப்புகள் அதிகம்...

5.நிலத்தடி சாக்கடை துப்பரவு கண்காணிப்பாளர் (Sewer Inspector)

எலிகள்,கரப்பான்பூச்சிகள் போன்றன இறந்து நீர் செல்லும் வழியை அடைக்கும், அவற்றை துப்பரவு செய்து நகரங்களில் வாழும் பலரின் சுகாதாரத்துக்கு பொறுப்பானவர்கள்...

நீர் செல்லும் குழாய்களில் உள்ள உடைவுகளையும் அடியில் சென்று பார்க்க வேண்டி ஏற்படுமாம்...

6. நண்டு, மீன் பிடிப்பவர் (Crab fisherman)

இது சாதாரணமாக லீவு நாட்களில் அமைதியாக மீன் பிடிக்கும் மாதிரி இல்லைங்க... Fishing persistently ranks as the most deadly occupation in the U.S

7.எடுத்துச் செல்லக்கூடிய கழிவிட துப்பரவாக்கி(Portable toilet cleaner)

ஒரு வெற்றிடத்தாங்கியையும் குழாயையும் பாவித்து உள்ளேயுள்ளதை உறிஞ்சி எடுக்க வேண்டும்...

சுகாதாரத்துக்கு கேடான தொழில்..

8.எண்ணைக் கிணற்றில் வேலை செய்பவர் (Oil Rig work)

அதிகமான சம்பளம் பெறும் ஒரு தொழிலாக இருந்தாலும் இலகுவான தொழிலல்ல...

எண்ணைக் கிணற்றில் வேலை செய்பவரின் தினசரி வாழ்க்கை அழுக்கானதும், ஆபத்தானதும் உள்ளதாம்...

9. Gastroenterologist

இவரை GI Doctor எனவும் அழைப்பர்...

நாம் உண்ணும் உணவு செரிமானமடைவதில் ஏதும் பிரச்சினை இருப்பின் இவரை அணுகலாம்...

இந்த மருத்துவரிடம் யாரும் சந்தோஷமாக செல்வது இல்லையாம்...

10.குப்பை சேகரிப்பவர் ( Garbage collector)

வீதியில் குப்பைத் தொட்டியை கண்டால் மூக்கை மூடியபடி நாம் செல்வோம்.

ஆனால், இவர்கள் நாம் போடும் கழிவுகளை துப்பரவு செய்து நமது சுகாதாரமான வாழ்வுக்கு துணையாக இருக்கிறார்கள்...

உடலுக்கு மிகக் கேடான தொழில்.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments