வடக்கில் இருக்கும் 21 வயதான இளைஞர் யுவதிகளே! இதோ ஒரு வாய்ப்பு

Report Print Amirah in வேலைவாய்ப்பு

மாகாண அரசாங்க சேவை ஆணைக்குழு - வட மாகாணம்

நிறைவேற்று சேவைக்கான ஆட்சேர்ப்பு - தரம் III

விண்ணப்ப முடிவு திகதி 30.12.2016

சட்ட அதிகாரி - தரம் III

தகைமை :- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றினால் சட்ட இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் இலங்கை உச்ச நீதிமன்றம் ஒன்றில் சட்ட வழக்கறிஞராக சத்தியப்பிரமாணம் செய்திருக்க வேணடும்.

அல்லது...

இலங்கை சட்டக்கல்லூரி ஒன்றில் 03 வருட கற்கை நெறியை பூர்த்தி செய்திருப்பதுடன் இலங்கை உச்ச நீதிமன்றம் ஒன்றில் சட்ட வழக்கறிஞருக்கான இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்திருக்க வேண்டும்.

அனுபவம் :- இலங்கை உச்ச நீதிமன்றம் ஒன்றில் சட்ட வழக்கறிஞராக சத்தியப்பிரமாணம் செய்த பின்னர் மூன்று வருடங்களுக்கு குறையாமல் நடைமுறை தொழில்முறை சேவையில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

இலங்கை அரசியல் யாப்பில் மாகாண சபைகளுக்கான சட்டம் அல்லது அது சார்ந்த வேறு சட்டத்தில் நடைமுறை அறிவு பெற்றிருக்க வேணடும்.

சம்பளம்:- (SL 1-2016) Rs. 47,615 - 10x1335 - 8x1,630 - 17x2,170 -110,895

வயது :- 21 வயதை குறையாமலும் 45 வயதை விட கூடுதலாகவும் இருக்க கூடாது

உயிரியல்மருத்துவ பொறியியலாளர் (Biomedical engineer)

தகைமை:- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றினால் மின்னணு / மின்னியல் / இயந்திர பொறியியல் அறிவியல் / உயிரியல்மருத்துவ பொறியியலாளர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்:- தொழில் அனுபவமானது மேலதிக தகைமையைாக கொள்ளப்படும்

சம்பளம்:- (SL 1-2016) Rs. 47,615 - 10x1335 - 8x1,630 - 17x2,170 -110,895

வயது :- 21 வயதை குறையாமலும் 45 வயதை விட கூடுதலாகவும் இருக்க கூடாது.

விண்ணப்பப் படிவம்

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments