18 வயதிற்கு மேற்பட்டவர்களா நீங்கள்? இதோ உங்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு

Report Print Amirah in வேலைவாய்ப்பு

முகாமைத்துவ உதவியாளர் - தரம் iii இற்கான பதவி வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

கல்வித் தகைமைகள் :- க.பொ.த. (சா / த) பரீட்சையில் சிங்களம் / தமிழ், கணிதம், ஆங்கிலமொழி பாடங்கள் உள்ளடங்கலாக 04 திறமைச் சித்திகளுடன் ஒரேதடவையில் 06 பாடங்களில் சித்தியடைந்திருத்தல்.

அத்துடன் க.பொ.த.(உ / த) பரீட்சையில் (புதிய பாடத்திட்டம்) 03 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் (பொது விவேகப் பரீட்சையினைத் தவிர்த்து) அல்லது க.பொ.த. (உ / த) பரீட்சையில் (பழைய பாடத்திட்டம்) 04 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

தரவு செயன்முறைப்படுத்தல் (Word Processing) அறிவு இருத்தல் மேலதிக தகைமையாகக் கருதப்படும்.

வயது : 2016 நவம்பர் 24 ஆம் திகதியன்று 18 வருடங்களிற்கு குறையாதவராகவும் 45 வருடங்களிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

சம்பள அளவுத்திட்டம் :- 27,910/- , 10x300/-, 7x350/-, 12x600/-, 12x710/- = 49,080/-

விண்ணப்ப முடிவுத் திகதி :- 2016.11.24

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments