இளைஞர்களே! முந்திக்கொள்ளுங்கள்.. இதுவே இறுதித் தருணம் ..

Report Print Amirah in வேலைவாய்ப்பு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

விண்ணப்ப முடிவு திகதி 2016.11.18

செய்முறை மறுபொறியியல் நிபுணர் - பதவி வெற்றிடம் 1

கல்வித் தகைமை :- பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைகுழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் அல்லது தகவல் தொழில்நுட்பத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம் :- தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் அல்லது தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறையில் 05 வருடம் அனுபவம் இருக்க வேண்டும்.

வயது :- 40 வயதை விட குறைவாக இருக்க வேண்டும்.

நடப்பு விவகாரங்கள் ஆய்வாளர் - பதவி வெற்றிடம் 2

கல்வித் தகைமை :- பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைகுழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பொருளியல், சர்வதேச உறவுகள், சட்டத் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம் :- பொருளியல், சர்வதேச உறவுகள், சட்டம் சார்ந்த துறையில் 05 வருடம் அனுபவம் இருக்க வேண்டும்.

வயது :- 40 வயதை விட குறைவாக இருக்க வேண்டும்.

ஆய்வு மற்றும் அபிவிருத்தி அதிகாரி - பதவி வெற்றிடம் 4

கல்வித் தகைமை :- பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைகுழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பொருளியல், சர்வதேச உறவுகள், சட்டத் துறையில் முதுகலை பட்டம் / முதல் வகுப்பு அல்லது இரண்டாம் வகுப்பு மேல் நிலை முதல் பட்டம் (First degree first class or second class upper level) பெற்றிருக்க வேண்டும்.

வயது :- 35 வயதை விட குறைவாக இருக்க வேண்டும்.

திட்ட அதிகாரி - பதவி வெற்றிடம் 6

கல்வித் தகைமை :- பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைகுழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் திட்ட முகாமைத்துவ துறையில் முதல் பட்டம் / பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம் :- திட்ட முகாமைத்துவம் சார்ந்த துறையில் 05 வருடம் அனுபவம் இருக்க வேண்டும்.

வயது :- 30 வயதை விட குறைவாக இருக்க வேண்டும்.

ஒப்பந்த அதிகாரி - பதவி வெற்றிடம் 1

கல்வித் தகைமை :- பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைகுழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் முதல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம் :- இந்த துறை சார்ந்த துறையில் 05 வருடம் அனுபவம் இருக்க வேண்டும்.

வயது :- 30 வயதை விட குறைவாக இருக்க வேண்டும்.

மொழிபெயர்ப்பாளர் - பதவி வெற்றிடம் 6

ஆங்கிலம் - சிங்களம் மொழிபெயர்ப்பாளர் 2 வெற்றிடம்

ஆங்கிலம் - தமிழ் மொழிபெயர்ப்பாளர் 2 வெற்றிடம்

சிங்களம் - தமிழ் மொழிபெயர்ப்பாளர் 2 வெற்றிடம்

கல்வித் தகைமை :- கல்விப் பொதுத் தராதர சாதாரனதர மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்திருக்க வேண்டும்.

அனுபவம் :- மொழிபெயர்ப்பாளர் துறையில் 05 வருடம் அனுபவம் இருக்க வேண்டும்.

வயது :- 35 வயதை விட குறைவாக இருக்க வேண்டும்.

ஆங்கிலம் தட்டச்சர் - பதவி வெற்றிடம் 4

கல்வித் தகைமை :- கல்விப் பொதுத் தராதர சாதாரனதர மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்திருக்க வேண்டும்.

அனுபவம் :- தட்டச்சர் துறையில் 05 வருடம் அனுபவம் இருக்க வேண்டும்.

வயது :- 35 வயதை விட குறைவாக இருக்க வேண்டும்.

கனிஷ்ட தொழில்முறை உதவியாளர்கள் - பதவி வெற்றிடம் 12

கல்வித் தகைமை :- கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்திருப்பதுடன் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைகுழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் முதல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது :- 24- 25

இலங்கை துறைமுக அதிகார சபையில் பல்வேறு பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

வயதெல்லை:- 45 வயதைவிட குறைவாக இருக்க வேண்டும் (இந்த வயது எல்லை பொதுத்துறையில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு அல்ல)

விண்ணப்ப முடிவு திகதி 18.11.12016

துணை தலைமை பாதுகாப்பு முகாமையாளர்

தகைமைகள் :- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகம் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட கல்வியகம் (academy) / பாடசாலை ஒன்றில் பட்டம் / டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம் :- இலங்கை இராணுவத்தில் துணை தளபதியாக அல்லது அதற்கு சமமான தகுதியுடைய வேறு இரண்டு சேவைகள் அல்லது பொலிஸ் துறையில் இரண்டு வருடம் சேவை அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம் :- கொடுப்பனவுகள் (allowances) உட்பட சுமார் 75,700/= ரூபா

முகாமையாளர் (பாதுகாப்பு)

தகைமைகள் :- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகம் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட கல்வியகம் (academy) / பாடசாலை ஒன்றில் பட்டம் / டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம் :- இராணுவத்தில் major (மேஜர்)ஆக அல்லது மான தகுதியுடைய வேறு இரண்டு சேவைகள் அல்லது பொலிஸ் துறையில் இரண்டு வருடம் சேவை அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம் :- கொடுப்பனவுகள் (allowances) உட்பட சுமார் 68,700/= ரூபா

Note :- இவ்விரண்டு பதவிகளுக்கும் விண்ணப்பிப்பவர்கள் சிறந்த தேக ஆரோக்கியம் உடையவர்களாகவும் கேட்டல் பார்த்தல் குறைப்பாடு அற்றவர்களாகவும் இருக்க வேண்டும்.

அத்துடன் உயரம் 5' 2” மார்பு சுற்றளவு 32” ஆக இருக்க வேண்டும்.

சிரேஷ்ட சட்ட அதிகாரி

தகைமைகள் :- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகம் ஒன்றில் சட்டத் துறையில் பட்டம் பெற்றிருப்பதோடு சட்ட வழக்கறிஞர் (attorney - at- law) விலும் சித்தியடைந்திருக்க வேண்டும்.

அனுபவம் :- ஒரு புகழ்பெற்ற அரசாங்க அல்லது தனியார் துறை அமைப்பு ஒன்றில் 5 வருடம் சேவையாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.

அல்லது

சட்டவழக்கறிஞராகவும் ஒரு புகழ்பெற்ற அரசாங்க அல்லது தனியார் துறை அமைப்பு ஒன்றில் 10 வருடம் சேவையாற்றிய அனுபவமும் இருக்க வேண்டும்.

சம்பளம் :- கொடுப்பனவுகள் (allowances) உட்பட சுமார் 75, 250/= ரூபா

சட்ட அலுவலர்

தகைமைகள் :- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகம் ஒன்றில் சட்டத் துறையில் பட்டம் பெற்றிருப்பதோடு சட்ட வழக்கறிஞர் (attorney - at- law) விலும் சித்தியடைந்திருக்க வேண்டும்.

அனுபவம்:- ஒரு புகழ்பெற்ற அரசாங்க அல்லது தனியார் துறை அமைப்பு ஒன்றில் 5 வருடம் சேவையாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.

அல்லது

சட்டவழக்கறிஞராகவும் ஒரு புகழ்பெற்ற அரசாங்க அல்லது தனியார் துறை அமைப்பு ஒன்றில் 10 வருடம் சேவையாற்றிய அனுபவமும் இருக்க வேண்டும்.

சிரேஷ்ட சட்ட அதிகாரி சட்ட அலுவலர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆங்கிலம் மற்றும் சிங்களம்/தமிழ் அனுமதி பெற்ற பத்திரத்துறை பதிவாளர் (notary public)க்கான அனுமதி பத்திரம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் :- கொடுப்பனவுகள் (allowances) உட்பட சுமார் 72, 300/= ரூபா

பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு - தெங்கு அபிவிருத்தி அதிகார சபை

கவனிப்பாளர் (inspector)

கல்வித்தகைமை :- G.C.E (சாதாரண தர) பரீட்சையில் ஒரே அமர்வில் சிங்களம் / தமிழ் மொழி, கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலத்தில் திறமை சித்தி உட்பட 6 பாடங்களில் சித்தி அடைந்திருக்கவேண்டும்

G.C.E (உயர் தர) பரீட்சையில் விஞ்ஞான பிரிவில் ஒரே அமர்வில் மூன்று பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும்.

தொழில்நுட்ப திறன்கள் / திறமைகள் :- குறைந்தது ஒரு வருடமாவது தொழில்நுட்ப டிப்ளமோ கற்றிருக்க வேண்டும். அல்லது அது சார்ந்த கற்கை நெறியில் சான்றிதல் பெற்றிருக்க வேண்டும். இலங்கை திறந்த பல்கலைக்கழகம், அல்லது அரச தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் அல்லது வேறு எந்த அரச அல்லது தனியார் நிறுவனத்தில் (NVQ5) பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

விண்ணப்ப முடிவு திகதி 18.11.2016

அபிவிருத்தி லொத்தர் சபை - நிதி அமைச்சு
உதவிப் பொது முகாமையாளர் (மனித வள மற்றும் நிர்வாகம்)

தகைமைகள் :-பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட மனித வள மேம்பாட்டு பட்டதாரி/ வியாபார நிர்வாகம்/ வணிகம்/ மேலாண்மை அல்லது அதற்கு சமமான பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அத்துடன்

குறைந்தபட்ச 5 ஆண்டுகள் அரசாங்க, மாநிலத்தில் அல்லது சட்டரீதியான நிறுவனம் ஒன்றில் அல்லது குறித்த துறையில் பட்டம் பெற்ற பின்னர் புகழ்பெற்ற தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றியிருக்க வேண்டும்.

ஒரு அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறை நிறுவனம் ஒன்றில் மனிதவள முகாமைத்துவ முழு உறுப்பினராகவும் அது தொடர்பான முகாமைத்துவத்தில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது :- 22 - 45

விண்ணப்ப முடிவு திகதி 24.11.2016

விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களம்

விடுதி நிருவாகி - வெற்றிடங்ள் 02

கல்வித் தகைமை :- சிஙகளம் / தமிழ் / ஆங்கிலம் மொழி, கணிதம் மற்றும் மேலும் இரண்டு பாடங்களில் திறமைச் சித்தியுடன் ஒரே அமர்வில் 6 பாடங்களில் கல்விப் பொதுத் தராதர (சா. த.) பரீட்சையில் சித்தியடைந்திருத்தல்.

அத்துடன்

கல்விப் பொதுத் தராதர (உ. த.) பரீட்சை யில் குறைந்தபட்சம் ஒரு பாடத்தில் (பொது சாதாரண பரீட்சை தவிர) சித்தியடைந்திருத்தல்.

அனுபவம்.- அரச அல்லது அதனுடன் இணைந்த விடுதி / நிறுவனத்தில் உதவி விடுதி அத்தியட்சகர் / உதவி

விடுதி நிருவாகி அல்லது அதற்குச் சமமான உயர் பதவி ஒன்றில் இரண்டு வருடங்களுக்குக் குறையாத அனுபவத்தைப் பெற்றிருத்தல்.

விண்ணப்ப முடிவுத் திகதி :- 22.11.2016

மேலதிக தகவல்கள் 04ஆம் திகதி அரசாங்க வர்த்தமானியில்

தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம்

திட்ட ஒருங்கிணைப்பாளர்

திட்ட பகுதி - யாழ்ப்பாணம், கிளிநொச்சி, அம்பாந்தோட்டை மாவட்டம்.

கல்வித் தகைமைகள்:- பல்கலைக்கழகம் ஒன்றில் விவசாயம், நிர்வாகம் / வணிகத்துறை, வள முகாமைத்துவம் அல்லது இவை தொடர்பான வேறு ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தது 7 வருடம் தொழில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

ஆங்கில மொழியில் நன்கு பேசும் மற்றும் எழுதும் திறன், சிங்களம் மற்றும் தமிழ் மொழியில் நன்கு பேசும் திறன் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் வாசிப்பு மற்றும் எழுத்து திறன்கள் இருப்பது பயனுள்ளதாக இருக்கும்.

விண்ணப்ப முடிவுத் திகதி :- 2016.11.22

இலங்கை வங்கி
பதவி நிலை உதவியாளர் - பயிலுநர்

கல்வித் தகைமைகள் :- க. பொ. த (சாதாரணதர) பரீட்சையில் ஒரே அமர்வில் தமிழ் அல்லது சிங்களம், கணிதம் மற்றும் ஆங்கிலம் உட்பட குறைந்தது ஐந்து பாடங்களில் திறமை சித்தியுடன் 6 பாடங்கள் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

அத்துடன்

க. பொ. த (உயர்தர) பரீட்சையில் ஒரே அமர்வில் மூன்று பாடங்களில் ( பொது ஆங்கிலம் மற்றும் பொது அறிவு தவிர்ந்து) சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

வயது :- விண்ணப்பப்பத்திரம் ஏற்றுக் கொள்ளப்படும் இறுதி தினத்தன்று 28 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப முடிவுத்திகதி 2016.11.28

கணக்காளர்

இலங்கை கணக்காளர் சேவையின் தரம் 3 இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் திறந்த போட்டிப் பரீட்சை.நவம்பர் 04ஆம் திகதி வர்த்தமானியில் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

கல்வித் தகைமை:- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலே வர்த்தகம், முகாமைத்துவம், கணக்கியல், பொருளியல ஆகிய துறைகளைச் சேர்ந்த பட்டம் ஒன்றினைப் பெற்றிருத்தல்

அல்லது

இலஙகைத் தொழில் நுட்பக் கல்லூரியின் / இலங்கை உயர்தொழில் நுட்பவியல் கல்வி நிறுவகத்தின் கணக்கியல் அல்லது வர்த்தகம் பற்றிய உயர்

டிப்ளோமாதாரர் ஒருவராகவிருத்தல் இலங்கைப் பட்டயக் கணக்காளர் நிறுவகத்தில் அல்லது வேறொரு பொதுநலவாய நாட்டைச் சேர்ந்த இறுதி அல்லது இடைநிலைப் பரீட்சை

அல்லது

அதிலும் கூடிய உயர்நிலைப் பரீட்சை ஒன்றிலே சித்தியடைந்திருத்தல்

அல்லது

ஐக்கிய இராச்சியத்தின் அல்லது வேறு யாதேனுமொரு பொதுநலவாய நாட்டைச் சேர்ந்த பட்டய முகாமைத்துவக் கணக்காளர் நிறுவனம் ஒன்றில் நடாத்தப்படும் செலவினம் மற்றும் முகாமைத்துவப் பரீட்சையின் i மற்றும் ii ஆம் பகுதிகள் அல்லது இடைநிலைப் பரீட்சை

அல்லது

அதிலும் கூடிய உயர்நிலைப் பரீட்சை ஒன்றிலே சித்தியடைந்திருத்தல்

அல்லது

ஐக்கிய இராச்சியத்தின் அல்லது வேறு யாதேனுமொரு பொதுநலவாய நாட்டின் சான்றிதழ் பெற்ற கணக்காளர்களின் நிறுவகத்தில் i ஆவது தொழில்சார் மட்டத்தில் அல்லது அதிலும் கூடிய உயர் மட்டத்திலான பரீட்சையில் சித்தியடைந்திருத்தல்

அல்லது

ஐக்கிய இராச்சியத்தின் அல்லது வேறு யாதேனுமொரு பொதுநலவாய நாட்டின் சான்றிதழ் பெற்ற கணக்காளர்களின் பட்டயச் சங்கத்தின் i ஆவது ii ஆவது பகுதிக்குரிய பரீட்சை அல்லது அதிலும் கூடிய பரீட்சை ஒன்றிலே சித்தியடைந்திருத்தல்

அல்லது

ஐக்கிய இராச்சியத்தின் செயலாளர்களின் மற்றும் நிருவாகிகளின் பட்டய நிறுவனத்தின் இறுதிப் பரீட்சை சித்தியடைந்திருத்தல் வேண்டும்

வயது :- 22-28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப முடிவுத்திகதி 2016.12.05

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments