வெளிநாடுகளுக்கு பணியாளர்களை அனுப்புவோருக்கு அதிர்ச்சி!

Report Print Vethu Vethu in வேலைவாய்ப்பு

இலங்கையில் மோசடியான முறையில் செயற்படும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களின் அனுமதி பத்திரங்கள் ரத்துச் செய்யப்படும் என்று அமைச்சர் தலத்தா அத்துகொரல தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையின் மதிப்பையும் கௌரவத்தையும் பின்பற்றாது, பாதிக்கப்பட்டவர்களினால் கூடுதல் முறைப்பாடுகள் கிடைக்கப் பெறும் முகவர் நிலையங்களே இவ்வாறு தடை செய்யப்படவுள்ளன.

வெளிநாடுகளுக்கு தொழிலாளிகளை அனுப்பும் நடவடிக்கையில் சுமார் மூவாயிரம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆனால் இலங்கையில் இவ்வளவு முகவர் நிலையங்கள் எதற்கு என்பது தெரியவில்லை. இவை அவசியமற்றது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2018ம் ஆண்டளவில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு ஆங்கில மொழி அவசியம் என்பது முழுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பொன்றிலேயே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments