அவுஸ்திரேலியா உங்களை அன்புடன் அழைக்கிறது! இதோ அரிய வாய்ப்பு

Report Print Ramya in வேலைவாய்ப்பு

இலங்கையில் உள்ள இளைஞர்கள் அவுஸ்திரேலியா சென்று பல்கலைக்கழக பட்டம் முடித்துவிட்டு அந்த நாட்டிலேயே பணியாற்றுவதற்கான வாய்ப்பு உள்ளதாக இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

நான்கு வருட பட்டப்படிப்பை நான்கு நிலைகளில் நிறைவு செய்ய முடியும் என்றும், மாணவர்கள் கல்வி கற்கும் காலத்தில் கொடுப்பனவும் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்

பல்கலைக்கழக பட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு அவுஸ்திரேலியாவில் பணி புரிவதற்கான அனுமதியும் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சரின் அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கட்டுமானதுறையில் மேசன் தொழிலுக்காக 15 ஆயிரம் வெற்றிடங்கள் இருப்பதாகவும் தச்சு தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும் இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார கூறியுள்ளார்.

ஆகவே இந்த தொழில் தொடர்பில் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கும் திட்டத்தை செயற்படுத்த அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments