ஐ.நா சபையில் புதிய செயலாளரை எப்படி தேர்ந்தெடுக்கிறார்கள்?

Report Print Printha in வேலைவாய்ப்பு

ஐ.நா சபை என்பது உலகில் போர்கள் ஏற்படாமல் தடுத்து, நாட்டின் அமைதியை நிலைநாட்டி, உலக மக்கள் அனைவரும் அவர்களின் அடிப்படை உரிமைகளுடன் வாழ்வதை உறுதி செய்யும் அமைப்பு தான் ஐக்கிய நாடுகள் சபை (united Nation) என்று அழைக்கப்படுகிறது.

உலகில் உள்ள 196 நாடுகளில் 193 நாடுகள் ஐ.நா சபை அமைப்பின் உறுப்பு நாடுகளாக அமைந்துள்ளது.

உலக நாடுகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, முழு செயல்பாடுகளையும் நிர்வகிப்பவரை ஐ.நா சபையின் பொதுச் செயலாளர் (General Secretary) என்று அழைக்கப்படுகிறார்கள்.

ஐ.நா சபை செயலாளருக்கான தகுதிகள்
  • உலக அமைதிக்கு முதல் தூதராக செயல்படும் திறன் இருக்க வேண்டும்.
  • உலக அரசியல் அறிவு, தலைமைப் பண்பு, அரசியல் செல்வாக்கு, உலக நாடுகளின் தலைவர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றும் பக்குவம், ஐ.நா அலுவலக மொழிகளில் ஆளுமை போன்ற முக்கிய தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.
  • ஐ.நா பொதுச் செயலாளரின் அதிகாரம் குறைவாக இருந்தாலும், ஒருசில நெருக்கடியான சமயங்களில் பேச்சு வார்த்தைகள் நடத்தி அமைதியை நிலைநாட்டும் பக்குவத்தை பெற்றிருக்க வேண்டும்.
  • உலக நாடுகளின் உள்நாட்டு பிரச்சனைகள் மற்றும் அண்டை நாடுகளுக்கு இடையிலான பிரச்சனைகள் போன்ற பலவகையான பிரச்சனைகளுக்கும் ஒருங்கிணைப்பாளராக இருந்து அதற்கான தீர்வை முன்மொழியும் திறன் மிகவும் அவசியமாக இருக்க வேண்டும்.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments