நீங்க கொமெடி பண்ணுவீங்களா? கூகுளில் காத்திருக்கு சூப்பரான வேலை

Report Print Raju Raju in வேலைவாய்ப்பு

ஆப்பிள் ஐபோனில் இருக்கும் ’சிரி’ அசிஸ்டெண்ட் போலவே , இப்போது கூகுள் அசிஸ்டெண்ட் என்னும் புரோக்ராமை வடிவமைத்துள்ளது கூகுள்.

கூகுளின் புதிய பிக்சல் ஸ்மார்ட் போன்களில் இந்த வசதி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிளின் சிரியில் நாம் வித்தியாசமாக கேள்வி கேட்டால் அதுவும் நமக்கு வித்தியாசமாக பதிலை சொல்லும்.

அதை விட பல படிகள் தனது கூகுள் அசிஸ்டெண்டை மேம்படுத்த இருக்கிறது கூகுள்.

நாம் ஸ்மார்ட் போனுடன் தனிமையில் இருந்தாலும் நம்முடன் ஒருவர் உடன் இருப்பது போல உணரமுடியும் என்கிறது கூகுள்! .

Ok Google என சொல்லி விட்டு நாம் அதனிடம் நம் கேள்வியை கேட்கும் படி அது வடிவமைக்கப்பட்டுள்ளது.

நாம் எந்த வித சந்தேகத்தையும், எந்த வித கேள்வியை கேட்டாலும் அது சூப்பராக நமக்கு பதில் தரும்.

இதற்காக நல்ல திறமையான மற்றும் நல்ல ஹியூமர் சென்ஸ் (நகைச்சுவை உணர்வு) கொண்ட ரைட்டர்கள் இந்த வேலைக்கு தேவை என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

அப்பறம் என்ன? உங்களுக்கு இந்த திறமை இருந்தா உடனே விண்ணப்பீங்க!

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments