இலங்கையில் நாள் சம்பளத்திற்கு வேலை செய்யும் சுற்றுலாவாசிகள்

Report Print Vethu Vethu in வேலைவாய்ப்பு

இலங்கைக்கு சுற்றுலா விசா மூலம் வருகைத் தரும் வெளிநாட்டவர்கள் கிட்டத்தட்ட 2 லட்சம் மேற்பட்டோர் நாள் சம்பளத்திற்கு வேலை செய்வதாக தெரியவந்துள்ளது.

தெற்கு ஆசிய நாடுகளில் இருந்து வரும் நபர்களில் அதிகமானோர் இந்தியா, பாகிஸ்தான், மாலைத்தீவு, பங்களாதேஷ் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களே இவ்வாறு நாள் சம்பத்தில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது.

சார்க் பிராந்தியத்திலுள்ள இலவச விசா மூலம் இவர்கள் இலகுவாக இலங்கைக்குள் நுழைவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நாட்டிற்கு பாரிய அளவிலான தொழிற்சாலைகள் மற்றும் நிர்மாணிப்பு வேலைகளுக்கு இந்த ஊழியர்களை மிகவும் விருப்பத்துடன் இணைத்துக் கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு வரும் வெளிநாட்டவர்களிடம் குறைந்த சம்பளத்தில் சேவையை பெற்றுக் கொள்ள முடியும் என்பதனால் இவ்வாறு விருப்பத்துடன் இணைத்துக் கொள்ளப்படுகின்றார்கள்.

ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதி ஆகியவை குறித்த ஊழியர்களுக்கு செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்பதனாலும் இவர்கள் இலகுவாக இணைத்துக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments