முடங்காதீர்கள் - முன்னேறி வாருங்கள்! வெற்றி பெறுவது எவ்வாறு? இதோ டிப்ஸ்

Report Print Ramya in வேலைவாய்ப்பு

”கறுப்பு நிறம் என்பதை அனைவரும் தகாத நிறமாகவே கருதுகின்றனர்.

ஆனால் ஒவ்வொரு கரும்பலகையும் தான் ஒவ்வொரு மாணவனின் வாழ்வையும் பிரகாசத்திற்கு கொண்டு சென்றுள்ளது அதுவே கறுப்பு நிறத்தின் வெற்றி!”

தேர்வுக்கு செல்பவர்களா நீங்கள் இதோ உங்களுக்காக..........

வேலை ஒன்று உங்களுக்கு கிடைக்க வேண்டுமானால் முதலில் நேர்முகத் தேர்வுக்கு சென்று அதில் வெற்றிபெற வேண்டும்.

அவ்வாறு செல்பவர்களுக்கான சில வழிகாட்டல்கள் இங்கு தரப்பட்டுள்ளன. அவற்றை நோக்குவோம்.

நேர்முகத்தேர்வுக்கு முதலில் தயாராக வேண்டும்.

நேர்முகத்தேர்வு நடாத்துபவர்கள் எந்தெந்த கேள்விகளை கேட்க வேண்டும் என முன்னதாகவே திட்டமிட்டு வைத்திருப்பார்கள்.

ஆகவே,நேர்முகத் தேர்வுக்கு செல்பவர்களும் தயாராகவே செல்ல வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடக்கும் நாளன்று குறைந்தது 15 நிமிடங்களுக்கு முன்னதாக செல்ல வேண்டும்.

அழகிய தோற்றத்துடன் இருக்க வேண்டும். சிலர் அதிகம் விரும்புவது, அழகிய தோற்றமுடையவர்கள் மற்றும் உற்சாகமுடையவர்களையே.

தைரியம் இருப்பதை வெளிப்படுத்தும் வகையில் மென்மையாக புன்னகைக்க வேண்டும். அனைவரையும் பார்த்து வணக்கம் கூறி, அமர வேண்டும். தேவையெனில் கைகுலுக்குங்கள்.

இருக்கையில் அமரும் போது நிமிர்ந்து உட்கார வேண்டும். தைரியமான தோற்றத்துடன் இருக்க வேண்டும்.

நேர்முகத்தேர்வு இடம் பெறும் போது அவர்களது கண்களை பார்த்து பேச வேண்டும்.

இருக்கையில் சரியான முறையில் அமர்ந்திருக்க வேண்டும்.

சமநிலையில் நம்பிக்கையாக அமர்ந்திருத்தல் வேண்டும்.

எல்லா கேள்விகளுக்கும் முழுமையாகவும் சரியாகவும் பதிலளிக்க வேண்டும்.

சில வேளைகலில் கேள்விக்கான பதில் தெரியாவிட்டால் மீண்டும் அந்த கேள்விகளை அவர்களிடம் கேட்கும் போது விடை நினைவுக்கு வரலாம்.

வீண் பேச்சுக்களை பேசுவதை தவிர்க்கவும்.நேர்மையாக இருக்கவும்.

உங்கள் திறமையை அறிய வல்லுநர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதற்றமில்லாமல் பதிலளிக்க வேண்டும்.

பதில்கள் அறிவு பூர்வமாக இருக்க வேண்டும்.

ஒரு கேள்விக்கு பதிலளித்து விட்டு அடுத்த கேள்விக்கு பதிலளிக்க வேண்டும்.

அனைவரிடமும் ஒரே மாதிரி மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும். கவனம் சிதறுவதற்கான சூழல் அங்கிருந்தாலும் கவனம் சிதறாமல் நடந்து கொள்ள வேண்டும்.

தெரியாததைக் கேட்டு விடுவார்களோ என்ற பயத்தில் தெரிந்த கேள்விக்கும் விடையளிக்காமல் இருக்க கூடாது.

உங்களைப் பற்றிய, பொது அறிவு சார்ந்த, திறமைகள் போன்ற மதிப்பீட்டு கேள்விகளே பெரும்பாலும் கேட்கப்படும்.

‘உங்களைப் பற்றி கூறுஙகள்’ என்றவுடன் பலபேர் தங்கள் பெயர், ஊர், பெற்றோர், குடும்பம் பற்றிய விபரங்களை கூறுவார்கள்.

அவர்கள் எதிர்பார்ப்பது இதை அல்ல. உங்களின் தனித்தன்மை, படிப்பு, அனுபவம், சாதனை, பலம், இலட்சியம், ஆளுமை, திறமை, விருப்பம் போன்றவை குறித்த விபரங்களை தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

கண்ணியமாக நடந்துக் கொள்ள வேண்டும்.

எந்த நிலையிலும் கண்ணியம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

அதிகம் பேசுவதை தவிர்த்துக் கொள்ளவும்.

சிறப்பான அம்சங்களைச் சொன்னால் தான் வேலை கிடைக்கும் என்று இல்லாத ஒன்றைச் சொல்ல முயற்சிக்கும் போது தான் பிரச்சினை ஆரம்பிக்கும்.

நீங்கள் அதிகம் சொல்கின்றீர்கள். அல்லது பொய் சொல்கிறீர்கள் என்று தேர்வு வல்லுநர்கள் கருதினால் உங்கள் பதிலில் இருந்தே பல கேள்விகளைக் கேட்டு உண்மையைச் சொல்லும்படியும் செய்து விடுவார்கள் எனவே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

கேள்விகளுக்கு தயக்கத்துடன் விடையளிக்க வேண்டாம்.

விமர்சனங்களை தவிர்க்கவும்.

மற்றவர்கள் பற்றியோ, மற்றைய ஊழியர்கள் பற்றியோ விமர்சிக்க கூடாது. நேர்மறையான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம்.

இறுதியில், நேர்முகத் தேர்வு நிறைவடைந்தவுடன் தேர்வு வல்லுநர்கள் நன்றி கூற மறந்து விடக்கூடாது.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments