C.V- Resume- Bio- Data இதில் இருக்கும் வித்தியாசங்கள் தெரியுமா?

Report Print Raju Raju in வேலைவாய்ப்பு

Curriculam Vitae(C.V), Resume, Bio-Data ஆகிய மூன்றும் ஒன்றா? வேறு வேறா என்ற குழப்பம் நம்மில் பலருக்கு இருக்கும்.

Curriculam Vitae(C.V) - மூன்றில் இதுதான் சற்று பெரியதாகும். இதை பெரிய பதவியில் இருக்கும் ஒருவர் வேறு நிறுவனத்துக்கு பெரிய பதவிக்கு வேலைக்கு செல்லும் போது பயன்படுத்த வேண்டும்.

இதில் ஒருவரின் திறன், அனுபவங்கள் பற்றிய தகவல்கள் அதிகம் இடம் பெற்றிருக்கும். இதில் இடம் பெறும் தகவல்கள் தெளிவாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

Resume- Resume என்பது ஒரு பக்கத்திலிருந்து இரண்டு பக்கங்கள் வரை இருக்க வேண்டும். இதனை அதிகம் புதிய வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் உபயோகப்படுத்துவார்கள்.

இதில் ஒருவரின் கல்வி தகுதி, திறன், முன் அனுபவங்கள் போன்றவை இடம் பெற வேண்டும்.

Bio-Data- இது பெரும்பாலும் ஒரு பக்க அளவிலேயே இடம் பெறும். ஒருவரின் அடிப்படை தகுதிகளின் விபரங்கள் இடம் பெறுவதே பயோ டேட்டா ஆகும்.

கல்வி தகுதி, நம் விருப்பங்கள், ஆர்வங்கள் ஆகிய விபரங்கள் இடம் பெறும் இதை கல்லூரி மாணவர்களும், முதல் முறை வேலைக்காக விண்ணப்பிப்பவர்களும் அதிகம் பயம்படுத்துவார்கள்.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments