வெகுவாக குறைந்துவரும் புரோட்பேண்ட் இணைய பாவனையாளர்களின் வளர்ச்சி வீதம்

Report Print Givitharan Givitharan in இன்ரர்நெட்

இந்தியாவில் உள்ள புரோட்பேண்ட் இணைய பாவனையாளர்கள் தொடர்பில் techArc நிறுவனம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

இதன்படி கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டுவரையான 5 ஆண்டு காலப் பகுதியில் புரோட்பேண்ட் சந்தாதாரர்களின் எண்ணிக்கை வளர்ச்சி வீதம் குறைவடைந்து வருவதாக தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனம் வயர்லெஸ் புரோட்பேண்ட் மற்றும் நிலையான புரோட்பேண்ட் என்பவற்றினை அடிப்படையாகக் கொண்டு மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையிலேயே இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் மொத்தம் 525 மில்லியன் புரோட்பேண்ட் பயனர்கள் உள்ளனர் எனவும், இவர்களில் 500 மில்லியனிற்கு மேற்பட்டவர்கள் வயர்லெஸ் புரோட்பேண்ட்டினையும், 17.6 மில்லியன் வரையானவர்கள் நிலையான புரோட்பேண்ட்டினையும் பயன்படுத்துகின்றனர்.

2016 ஆம் ஆண்டு ஜியோ வலையமைப்பு அறிமுகம் செய்யப்பட்ட நேரத்தில் அதிகளவு இணைப்பு பெறப்பட்டுள்ளதாகவும், இது 73 சதவீத அதிகரிப்பாக இருந்தாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதன் பின்னர் 2017 ஆம் ஆண்டில் 54 சதவீதமாகவும், இவ் வருடத்தில் 44.7 சதவீதமாகவும் காணப்படுகின்றது.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்