அறிமுகமாகின்றது வேகமாக செயற்படக்கூடிய மைக்ரோசொப்ட் Edge Chromium இணைய உலாவி

Report Print Givitharan Givitharan in இன்ரர்நெட்

மைக்ரோசொப்ட் நிறுவனம் சில வருடங்களுக்கு முன்னர் வரை மைக்ரோசொப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் எனும் இணைய உலாவியையே பயனர்களின் பயன்பாட்டிற்கு விட்டது.

எனினும் இதற்கு போட்டியாக கூகுளின் குரோம், மொஸில்லாவின் பையர்பாக்ஸ் என்பன முன்னணிக்கு வந்தமையால் மைக்ரோசொப்ட் எட்ஜ் எனும் புதிய உலாவியினை அறிமுகம் செய்தது.

எனினும் இவ் உலாவியினால் குரோம் மற்றும் பயர்பாக்ஸ் உலாவிகளுடன் போட்டி போட முடியவில்லை.

இதனால் Edge Chromium எனும் மற்றுமொரு புதிய இணைய உலாவியினை அறிமுகம் செய்யவுள்ளது.

இவ் உலாவியினை ஆப்பிளின் மேக் மற்றும் விண்டோஸ் ஆகியவற்றில் பயன்படுத்த முடியும்.

இதன்படி Windows 7, 8 மற்றும் 10 ஆகிய இயங்குதளங்களில் பயன்படுத்த முடியும்.

மேலும் இவ் உலாவியானது முற்றிலும் ஓப்பின் சோர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...