இணையப் பக்கங்களை பல மடங்கு வேகத்தில் கண்டுகளிக்க வேண்டுமா?

Report Print Givitharan Givitharan in இன்ரர்நெட்

பிரபலமான குரோம், பையர் பொக்ஸ் போன்ற இணைய உலாவிகளை பயன்படுத்துபவர்களுக்கு மத்தியில் Brave எனப்படும் உலாவி காணப்படுகின்றமை பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இவ் உலாவியில் இதுவரை இல்லாத அளவிற்கு 20 மடங்கு முதல் 27 மடங்கு வரை வேகமாக இணையப்பக்கங்களை தரவிறக்கம் செய்து பார்வையிடுவதற்கான வசதி தரப்பட்டுள்ளது.

இவ் வசதியானது SpeedReader என அழைக்கப்படுகின்றது.

மேலும் இவ் வசதியின் ஊடாக 2.4 மடங்கு நினைவகம் குறைவாக பயன்படுத்தப்படுவதுடன், இணைய வலையமைப்பு வேகம் 84 சதவீதம் குறைவாக இருக்கின்ற போதிலும் இணையத்தளங்களை சிறப்பாக பார்வையிட முடியும்.

தற்போது இவ் உலாவியை உலகெங்கிலும் சுமர் 5 மில்லியன் வரையானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனாலும் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள SpeedReader வசதியின் பின்னர் இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்