உலகம் முழுவதும் யூ டியூப் இணையதள சேவை திடீரென முடங்கியுள்ளது.
சர்வர் கோளாறு காரணமாக இவ்வாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ள யூ டியூப் , இதனை விரைவில் சரி செய்துவிடுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
யூ டியூப் முடக்கத்தை தொடர்ந்து சமூகதளவாசிகள் தங்கள் கருத்துக்களை தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். இதனால், #YouTubeDOWN என்ற ஹேஷ்டாக் உலக ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.