ஐரோப்பிய பாராளுமன்றத்தில் விளக்கம் அளிக்கும் மார்க் ஜூக்கர்பெர்க்

Report Print Kabilan in இன்ரர்நெட்
68Shares
68Shares
lankasrimarket.com

பேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளார்.

Cambridge Analytica எனும் நிறுவனம், தங்கள் அரசியல் வாடிக்கையாளர்களுக்காக 8 கோடிக்கும் அதிகமான பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தங்களது தவறை ஒப்புக்கொண்டு, அதற்கு மன்னிப்பும் கேட்டார்.

இந்நிலையில், ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தகவல் திருட்டு தொடர்பாக உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் மார்க் ஜூக்கர்பெர்க், அவர்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளார்.

இதனை உறுதி செய்யும் வகையில் ஐரோப்பிய பாராளுமன்ற அவைத்தலைவர் அந்தோனியோ டஜானி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்