இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகும் பணப் பரிமாற்ற சேவை

Report Print Givitharan Givitharan in இன்ரர்நெட்

புகைப்படங்களை பரிமாற்றம் செய்துகொள்ளும் தளமாக ஆரம்பிக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் ஆனது தற்போது பல் வேறு சேவைகளையும் வழங்கிவருகின்றது.

இதன் அடுத்த கட்டமாக பணம் செலுத்தும் சேவையினையும் ஆரம்பிப்பது தொடர்பில் பரீட்சிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஊடாக சேவை ஒன்றினை பெற்றுக்கொள்வதற்காக பணத்தை செலுத்தி திகதி, நேரம் போன்ற விடயங்களை முற்கூட்டியே பதிவுசெய்துகொள்ள முடியும்.

இதற்காக Book எனும் பொத்தானும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இச் சேவையினைப் பெறுவதற்கு பயனர்கள் தமது கிரடிட் கார்ட் அல்லது டெபிட் கார்ட் தொடர்பான தகவல்களை முற்கூட்டியே வழங்கியிருக்க வேண்டும்.

இதனைப் ஒவ்வொரு தடவையும் பயன்படுத்தும்போது பாதுகாப்பு கருதி Security Pin வழங்கப்படும்.

அத்துடன் திரைப்படங்களை பார்வையிடுவதற்கான டிக்கட்களையும் இச் சேவையின் ஊடாக கொள்வனவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers