மில்லியன் கணக்கான ரவுட்டர்களை ஹேக் செய்ய திட்டம்: ரஷ்யாவின் சைபர் யுத்தம்

Report Print Givitharan Givitharan in இன்ரர்நெட்
155Shares
155Shares
ibctamil.com

ரஷ்யாவை சேர்ந்த ஹேக்கர்கள் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான ரவுட்டர்களை (Routers) ஹேக் செய்ய திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கணினி வலையமைப்பை உருவாக்க பயன்படும் இந்த ரவுட்டர்களை ஹேக் செய்வதன் ஊடாக இணைய வலையமைப்பினை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

இந்நிலையில் வீடுகள், அலுவலகங்கள் என அனைத்திலும் காணப்படும் ரவுட்டர்கள் ஹேக் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையை அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் என்பன இணைந்து வெளியிட்டுள்ளன.

இத் தாக்குதல் இடம்பெற்றால் அனைத்து வலையமைப்புக்களும் ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுவது மாத்திரமின்றி பாரிய தகவல் திருட்டு சம்பவமும் இடம்பெற வாய்ப்புக்கள் அதிகம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் இத் தாக்குதலை எவ்வாறு முறியடிப்பது என்பது தொடர்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்