பேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் திருட்டு எவ்வாறு நிகழ்ந்தது? மார்க் ஜூக்கர்பெர்க் விளக்கம்

Report Print Kabilan in இன்ரர்நெட்
144Shares

பேஸ்புக்கை பயன்படுத்தும் சுமார் 87 மில்லியன் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்ட தகவல் வெளியானதைத் தொடர்ந்து, இது எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் விளக்கம் அளித்துள்ளார்.

சமூக வலைதளமான பேஸ்புக்கைப் பயன்படுத்துபர்களில், சுமார் 50 மில்லியன் பேரின் தகவல்கள் தனியார் நிறுவனமான Cambridge Analytica மூலமாக திருடப்பட்டதாக முதலில் தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து, தற்போது சுமார் 87 மில்லியன் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக, பேஸ்புக் நிறுவனத்தின் தொழில்நுட்ப தலைமை அலுவலர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த தகவல் திருட்டு எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து, பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் கூறுகையில்,

பேஸ்புக்கை உபயோகிப்பதற்கான கருவிகளை மக்களிடம் கொடுத்தால், அதனை எவ்வாறு உபயோகிப்பது என்பது அவர்களின் பொறுப்பு ஆகும். இதனை நான் முன்பே கருதியிருந்தேன்.

ஆனால், அது ஒரு தவறான சுயபரிசோதனை செய்யும் வகையிலான கண்ணோட்டத்தை கொடுத்துள்ளது. இன்று நாங்கள் என்ன அறிந்து கொண்டோம் என்றால், எங்களது பொறுப்பு மீதான பரந்த பார்வையை புரிந்து கொண்டுள்ளோம்.

நாங்கள் கருவிகளை மட்டும் உருவாக்கவில்லை. அவற்றை மக்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதற்கான பொறுப்பையும் நாங்கள் எடுக்க வேண்டியுள்ளது.

பயனாளர்கள் பேஸ்புக்கில் தங்களது இமெயில் அல்லது தொலைபேசி எண்ணை பயன்படுத்துவதன் மூலம், ஒருவரையொருவர் தேட அது அனுமதிக்கும். ஆனால், இந்த அம்சம் தான் தீங்கிழைக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதன் விளைவாக பலரின் பொது சுயவிவரத் தகவலானது திருடப்பட்டது. மேலும், மற்றொரு இடத்துடன் அவர்களின் தொடர்பு விவரங்கள் பொருந்திப்போனது.

பேஸ்புக் தற்போது இந்த அம்சத்தை தடை செய்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் யாரோ உங்களது பொது தகவலை, இந்த வழியில் அணுகியிருக்கலாம்.

தெளிவாக நாங்கள் முடிக்க வேண்டியது நிறைய இருக்கிறது மற்றும் நாங்கள் மேலும் முன்னோக்கி செல்வோம் என தெரிவித்துள்ளார்.

Getty Images

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்